மக்களில் மத்தியில் TikTok அமோக வரவேற்பை பெற்றதை தொடர்ந்து தற்பொழுது TikTok மேல் இருக்கும் தடையை நீக்கியுள்ளது, இதனுடன் இதில் பல டிக்டாக் ஆப்யில் ஆபாச வீடியோக்கள் அதிகளவு பரவுவதால் சிறுவர்களின் பாதுகாப்பிற்கு ஆபத்து ஏற்படுவதாக குற்றஞ்சாட்டப்பட்டது, மேலும் இதில் என்னதான் காமடி போன்ற பொழுது போக்கு இருந்தாலும் சிலர் திறமை என்கிற பெயரில் ஆபாசமாக வீடியோக்கள் எடுத்து வெளியிட்டனர். குறிப்பாக, இளம் பெண்களின் கவர்ச்சியான வீடியோக்கள் அதிக அளவில் பதிவிடப்பட, டிக் டாக் ஆபாச தளமாக பார்க்கப்பட்டது. மேலும் சிலர் தற்கொலை போன்ற பல புகார் தொடர்ந்து எழுந்ததால் இதை மதுரை உயர் நீதிமன்றக் கிளையில், டிக்டாக் செயலிக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறப்பட்டது
அதனை தொடர்ந்து ஏப்ரல் 23ம் தேதி வழக்கை விசாரித்த நீதிமன்றம், டிக்டாக் செயலியை தடை செய்ய உத்தரவிட்டது. தடையின் காரணமாக பல்லாயிரம் கோடி வருவாய் இழந்து வருவதாக தெரிவித்து இருந்தது இந்தியாவில் டிக்டாக் செயலி தடை செய்யப்பட்டிருந்த காலக்கட்டத்தில் மட்டும் பைட் டேன்ஸ் நிறுவனம் ஒவ்வொரு நாளும் சுமார் ரூ.3,49,63,000 வரை நஷ்டத்தை சந்தித்ததாக ராய்ட்டர்ஸ் வெளியிட்டிருக்கும் தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி தடை காரணமாக சுமார் 250 பேருக்கு வேலை பறிபோகும் நிலை உருவானதாக கூறப்படுகிறது.
மேலும் டிக்டாக்கை .இந்நிலையில், இந்த வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணை (ஏப்ரல் .24) ஐகோர்ட் மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆபாசமாக வீடியோக்கள் பதிவேற்றம் செய்தால், தானாகவே செயலி அதனை அழித்துவிடும் என டிக் டாக் நிறுவனம் உறுதியளித்தது.
மீண்டும் உச்சநீதிமன்றத்தின் கோர்ட் உத்தரவை அடுத்து நீக்கப்பட்ட டக் டாக் செயலி மீண்டும் கூகுள் பிளே ஸ்டோருக்கு பதிவிறக்கம் செய்யும் வகையில் வந்துள்ளது. இதனுடன் ஆப் ஸ்டோரில் நீங்கள் டவுன்லோடு செய்து கொள்ளலாம்
இந்தியாவில் கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப் ஸ்டோரில் டிக்டாக் ஆப் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளது. அதனை தொடர்ந்து டிக் டோக் மீண்டும் முதலிடத்தில் அதிக ஷேர் மற்றும் குழுக்கள் முறையில் தேர்ந்தெடுத்து 1 லட்சம் வரை பரிசு தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.