ஒன்பது கோடி டவுன்லோடு கடந்தது டிக்டோக்,

ஒன்பது  கோடி  டவுன்லோடு  கடந்தது  டிக்டோக்,
HIGHLIGHTS

டிக்டாக் செயலியின் மொத்த டவுன்லோடுகளில் சுமார் 99 சதவிகிதம் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இந்த ஆண்டின் முதல் காலாண்டு வாக்கில் உலகளவில் அதிகம் டவுன்லோடு செய்யப்பட்ட செயலிகளில் டிக்டாக் மூன்றாவது இடம் பிடித்திருக்கிறது

இந்தியாவில் டிக்டாக் செயலி தடை செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்திருக்கும் நிலையில், இதனை டவுன்லோடு செய்வோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்திருக்கிறது. மேலும் இத்தகைய  கோரிக்கைகள்  தமிழ்  நாட்டில்   தடை விதிக்க பல புகார்  வந்து கொண்டிருக்கும்  நிலையில்.

சீனாவை சேர்ந்த வீடியோ ஷேரிங் செயலியான டிக்டாக் இந்த ஆண்டின் முதல் காலாண்டில் மட்டும் சுமார் 8.86 கோடி டவுன்லோடுகளை கடந்துள்ளது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது 8.2 மடங்கு அதிகம் ஆகும். மொபைல் ஆப் சார்ந்த ஆய்வு நிறுவனமான சென்சார் டவர் வெளியிட்ட சமீபத்திய அறிக்கையில் இந்த விவரங்கள் இடம்பெற்றிருக்கிறது.

இதைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றம் டிக்டாக் செயலியில் ஆபாச காட்சிகள் ஊக்குவிக்கப்படுவதால், குழந்தைகளை மனதளவில் பாதித்து அவர்களின் எதிர்காலத்தை சீரழிக்கும் என்பதால் செயலியை தடை செய்ய வேண்டும் என உத்தரவிட்டது.

டிக்டாக் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்ந்து எழுந்து வரும் நிலையில், இந்த ஆண்டின் முதல் காலாண்டில் மட்டும் கிட்டத்தட்ட 188 கோடியாக இருக்கிறது என சென்சார் டவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டை விட 70 சதவிகிதம் அதிகம் ஆகும்.

டிக்டாக் செயலியின் மொத்த டவுன்லோடுகளில் சுமார் 99 சதவிகிதம் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இந்த ஆண்டின் முதல் காலாண்டு வாக்கில் உலகளவில் அதிகம் டவுன்லோடு செய்யப்பட்ட செயலிகளில் டிக்டாக் மூன்றாவது இடம் பிடித்திருக்கிறது. முதல் இரண்டு இடங்களில் வாட்ஸ்அப் மற்றும் மெசஞ்சர் செயலிகள் இருக்கின்றன.

சீன தொழில்நுட்ப நிறுவனமான பைட்-டேன்ஸ் டிக்டாக் செயலியை நிர்வகிக்கிறது. முன்னதாக அமெரிக்காவில் குழந்தைகளின் தனிப்பட்ட விவரங்களை சேகரித்ததாக டிக்டாக் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. 

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo