சர்வதேச அளவில் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் அதிகமாக டவுன்லோட் செய்யப்பட்ட ஆப்கள் குறித்த சர்வேயை, சென்சார் டவர் நிறுவனம் நிதியாண்டின் நான்கு காலகட்டத்திலும் தனித்தனியாக நடத்தி வருகிறது. அதன்படி, 2019ம் நிதியாண்டின் முதல் காலாண்டில் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் அதிகம் பேரால் டவுன்லோடு செய்யப்பட்ட ஆப்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, ஆப்பிள் ஆப் ஸ்டோரில், இந்த நிதியாண்டின் முதல் காலகட்டத்தில் அதிகம் பேரால் டவுன்லோடு செய்யப்பட்ட ஆப்களின் பட்டியலில், டிக் டாக் முதலிடத்தில் உள்ளது. அதற்கடுத்த இடங்களில் யூடியூப், இன்ஸ்டாகிராம், வாட்சப் உள்ளவைகள் உள்ளன.
மக்களில் மத்தியில் TikTok அமோக வரவேற்பை பெற்றதை தொடர்ந்து தற்பொழுது TikTok மேல் இருக்கும் தடையை நீக்கியுள்ளது, இதனுடன் இதில் பல டிக்டாக் ஆப்யில் ஆபாச வீடியோக்கள் அதிகளவு பரவுவதால் சிறுவர்களின் பாதுகாப்பிற்கு ஆபத்து ஏற்படுவதாக குற்றஞ்சாட்டப்பட்டது, மேலும் இதில் என்னதான் காமடி போன்ற பொழுது போக்கு இருந்தாலும் சிலர் திறமை என்கிற பெயரில் ஆபாசமாக வீடியோக்கள் எடுத்து வெளியிட்டனர். குறிப்பாக, இளம் பெண்களின் கவர்ச்சியான வீடியோக்கள் அதனை தொடர்ந்து இந்த செயலியை முடக்க பட்டு மீண்டும் விடுவிக்கபட்டது அதனை தொடர்ந்து இந்த செயலி அசுரர் வளர்ச்சியில் கொடி கட்டி பறக்குகிறது.
2019ம் நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்தியாவில் மட்டும் புதிதாக 88 மில்லியன் பேர் டிக்டாக் பயன்படுத்த துவங்கியுள்ளனர். இந்தியாவில் மட்டும் 260 மில்லியன் பேர் டிக்டாக் அப்ளிகேசனை பயன்படுத்திவருகின்றனர்.. இந்தியாவில் டிக் டாக் ஆப்பிற்கு தடைவிதிக்கப்பட்டு அது மீண்டும் திரும்ப பெறப்பட்ட நிலையில் இந்த அசுர வளர்ச்சி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.