Threads யில் வருகிறது Edit மற்றும் Voice Note அம்சம்

Threads யில் வருகிறது Edit மற்றும் Voice Note அம்சம்
HIGHLIGHTS

சோசியல் மீடியா தளமான Threads பல அம்சங்கள் வருகின்றன.

இதில் எடிட் செய்யும் வசதி, வொயிஸ் நோட்ஸ்களைக் அனுப்பும் வசதி ஆகியவை அடங்கும்

இது X (முந்தைய ட்விட்டர்) உடன் மோதும் விதமாக கொண்டு வரப்பட்டது.

மெட்டாவின் டெக்ஸ்ட் அடிப்படையிலான சோசியல் மீடியா தளமான Threads பல அம்சங்கள் வருகின்றன. இதில் போஸ்ட்டை எடிட் செய்யும் வசதி, வொயிஸ் நோட்ஸ்களைக் அனுப்பும் வசதி ஆகியவை இதில் அடங்கும். பிரபலமான ட்ரெண்டின் டாபிக்ஸ் போன்ற அம்சங்களிலும் இயங்குதளம் செயல்படுகிறது. இந்த ஆண்டு ஜூலையில் த்ரெட்ஸ் அறிமுகப்படுத்தப்பட்டது மற்றும் இது X (முந்தைய ட்விட்டர்) உடன் மோதும் விதமாக கொண்டு வரப்பட்டது.

Threads யில் வரும் அம்சம்.

The Verge யின் அறிக்கையின்படி, Meta CEO Mark Zuckerberg சமீபத்தில் த்ரெட்களுக்கு மிகவும் தேவையான எடிட் பட்டன் கிடைக்கும் என்று அறிவித்தார். அதாவது, பயனர்கள் தங்கள் போஸ்ட்களை போஸ்ட் செய்யப்பட பிறகு மாற்ற முடியும். இதுவரை, த்ரெட்ஸ் எடிட் ஆப்ஷன் இல்லை. கடந்த ஆண்டு அக்டோபரில் எலோன் மஸ்க் நிறுவனத்தை வாங்கிய பிறகுதான் ட்விட்டரில் எடிட் பட்டனும் வந்தது. இருப்பினும், இந்த அம்சம் நீல சப்ச்க்ஸ்க்ரைபர்களுக்கு மட்டுமே கிடைக்கும்.

எலோன் மஸ்க்கின் X போலவே, த்ரெட்களிலும் எடிட் ஆப்ஷனில் கால லிமிட் இருக்கும்., பயனர்கள் த்ரெட்ஸ் போட்ட போஸ்ட்டை 5 நிமிடங்களில் எடிட் செய்ய வேண்டும், இதற்குப் பிறகு அவர்களால் பதிவில் எந்த மாற்றமும் செய்ய முடியாது. கூடுதலாக, ப்ளாட்ஃபார்மில் வொயிஸ் நோட்களை பகிர்வதற்கான விருப்பத்தையும் த்ரெட்ஸ் கொண்டு வருகிறது. பயனர்கள் புதிய மைக்ரோஃபோன் பட்டனை தட்டி தங்கள் வொயிசை பதிவு செய்ய வேண்டும். இதற்குப் பிறகு இந்த வைஸ் நோட்ஸ் த்ரெட்ஸ் யில் ஷேர் செய்ய முடியும் சில பயனர்களுக்கு ஏற்கனவே எடிட் பட்டன் மற்றும் வொயிஸ் நோட்ஸ்களை அக்சஸ் உள்ளது, மேலும் இந்த அம்சங்கள் விரைவில் அதிகமான பயனர்களுக்கு வழங்கப்படலாம்.

இதையும் படிங்க: Jio யின் JioBharat B1 ரூ,1299 யில் அறிமுகம் UPI அம்சம் இருக்கும்

X (ட்விட்டர் ) போட்டியாக வரும் த்ரெட்ஸ்

மெட்டாவின் டெக்ஸ்ட் அடிப்படையிலான சோசியல் மீடியா தளமான த்ரெட்ஸ், இந்த ஆண்டு ஜூலையில் அறிமுகம் செய்யப்பட்டது மற்றும் ட்விட்டருக்கு கடுமையான போட்டியை வழங்குவதை நோக்கமாகக் கொண்டது, இப்போது X என்று அழைக்கப்படுகிறது. ஆப் அறிமுகம் செய்யப்பட்ட 5 நாட்களுக்குள் மில்லியன் கணக்கான டவுன்லோட்களை பெற்றது மற்றும் ஏற்கனவே Instagram ஐப் பயன்படுத்துபவர்கள் எளிதாக த்ரெட்ஸ் அக்கவுண்ட்களை உருவாக்க அனுமதித்தது.

பல்வேறு காரணங்களுக்காக மைக்ரோ-பிளாக்கிங் இயங்குதளம் X யில் பயனர்கள் மகிழ்ச்சியடையாத நேரத்தில் இந்த ஆப் அறிமுகம் செய்யப்பட்டதல் த்ரெட்ஸ்X ஐ முழுவதுமாக மாற்ற முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும், Instagram CEO Adam Mosseri பின்னர், த்ரெட்ஸின் குறிக்கோள் ட்விட்டரை மாற்றுவது அல்ல, மாறாக ‘குறைவான கோபம்’ தளத்தைத் தேடும் பயனர்களுக்கு மாற்றாக வழங்குவதாகக் கூறினார்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo