நம் அன்றாட வாழ்வில் மக்கள் பேருந்து வருமா இல்லையா என்று மணி கணக்காக காத்து கொண்டு இருக்கிறார்கள், மேலும் பஸ் எப்பொழுதும் வரும் என அக்கம்பக்கத்தில் கேட்பதும் வாடிக்கையாக வைத்து இருக்கிறார்கள், மேலும் சிலர் தவறான நேரத்தையும் சொல்லி சமாளிப்பது உண்டு இது போன்ற பிரச்னையை தீர்ப்பதற்க்கு இப்பொழுது வரும் அப்பொழுது வரும் என தட்டி கழிப்பார்கள் மேலும் இது போன்ற பிரச்சனையை தீர்க்க தமிழ்நாட்டு போக்குவரத்து ஆணையம் இது போன்ற பிரச்சனை தீர்க்க புதிய ஆப் ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
நம்முடைய ஓலா மற்றும் உபர் செயலிகள் போன்று, தமிழக அரசு பேருந்துகளும் செயல்பட இருக்கிறது. நம்முடைய பேருந்துகள் எங்கே இருக்கிறது முதற்கொண்டு, எத்தனை மணிக்கு நம்முடைய நிறுத்தத்திற்கு அது வரும், நமக்கு அருகில் இருக்கும் பேருந்து நிறுத்தம் எது என அனைத்து தகவல்களையும் அளிக்கும் வகையில் செயலி ஒன்றை வெளியிட இருப்பதாக அறிவித்துள்ளது தமிழக அரசு.
மொத்தம் 21,800 பேருந்துகளில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. சென்னை மாநகரில் மட்டும் சுமார் 3,300 பேருந்துகள் இயக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. சலோ இந்தியா என்ற ஆப் டெவலிப்பிங் நிறுவனம் இந்த செயலியை உருவாக்கி வருகிறது. அனைத்து பேருந்துகளிலும் GPS பொருத்தப்படும். மேலும் ஜியோ கோடிங்கிற்கு தேவையான கோட்களை போக்குவரத்து துறை பணியாளர்கள் உருவாக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
Locate and Access My Bus (LAMB) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த செயலியை உருவாக்க முதற்கட்ட உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது ஐ.ஓ.எஸ் மற்றும் ஆண்ட்ராய்ட் என இரண்டு போன்களிலும் செயல்படும் வகையில் உருவாக்கப்பட உள்ளது என்பது கூடுதல் தகவல். இதில் பேருந்தின் லைவ் லோகேஷன், எஸ்டிமேட்டட் டைம் ஆஃப் அரைவல் ஆகியவற்றை அறிந்து கொள்ள இயலும். அக்யூரசி எவ்ளோனா வெறும் 1 நிமிடம் தான். பேருந்து கடக்க இருக்கும் அடுத்த 5 பேருந்து நிறுத்தங்களை அடிப்படையாக கொண்டு இந்த எஸ்டிமேட்டட் டைம் கால்குலேட் செய்யப்படுகிறது