Swiggy யின் சொந்த UPI அறிமுகம் இனி மத்த UPIக்கு வேலை இல்லை

Updated on 14-Aug-2024
HIGHLIGHTS

Swiggy அதன் சொந்த UPI சேவையை புதன்கிழமை அறிமுகம் செய்தது

இந்திய தேசிய கொடுப்பனவு கழகத்தின் (NPCI) UPI Pluggin) நிறுவனம் ஒருங்கிணைத்துள்ளது

இப்போது Swiggy ஆப்பை விட்டு வெளியேறாமல் UPI ட்ரேன்செக்சன் செய்ய முடிக்க முடியும்

Swiggy அதன் சொந்த UPI சேவையை புதன்கிழமை அறிமுகம் செய்தது கஸ்டமர்களுக்க்கு சிறந்த பேமன்ட் அனுபவத்தை வழங்குவதற்காக, இந்திய தேசிய கொடுப்பனவு கழகத்தின் (NPCI) UPI Pluggin) நிறுவனம் ஒருங்கிணைத்துள்ளது. இந்த ஒருங்கிணைப்பு மூலம், பயனர்கள் இப்போது Swiggy ஆப்பை விட்டு வெளியேறாமல் UPI ட்ரேன்செக்சன் செய்து முடிக்க முடியும். இது பணம் செலுத்தும் செயல்முறையை எளிதாக்கியுள்ளது. இதற்காக, பயனர்கள் இப்போது இதில் வேலை இன்னும் ஈசியாக மாறியது

Swiggy UPI அம்சம் எப்படி இருக்கும்

ஸ்விக்கியின் கூற்றுப்படி, அதன் புதிய கட்டண முறை 2022 இல் அறிமுகப்படுத்தப்பட்ட NPCI யின் UPI Plugin பயன்படுத்துகிறது. மெர்ஜன்ட் ஆப்களுக்குள் UPI சேவைகளை வழங்கும்போது அவர்களிடமிருந்து தர்ட் பார்ட்டி அப்ளிகேசன் ப்ரோவைடர் (TPAP) உரிமத்திற்கான தேவையை இது நீக்குகிறது. பயனர்கள் Swiggy ஆப்யிலிருந்து வெளியேறாமல் ட்ரேன்செக்சன்களை மேற்கொள்ளலாம், செயல்முறையை முடிக்க மூன்றாம் தரப்பு ஆப்களுக்கு மாறும்போது அடிக்கடி ஏற்படும் பேமெண்ட் தோல்விகளைக் குறைக்கலாம்.Swiggy UPI எளிய மற்றும் இனிமையான பயனர் அனுபவத்தை வழங்குகிறது. இது ட்ரேன்செக்சன் நேரத்தை 15 வினாடிகளில் இருந்து வெறும் 5 வினாடிகளாக குறைக்கிறது.

Swiggy UPI

நிர்மலா சீதாராமன் கூறியது என்ன

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஏப்ரல் 2024 யில் இந்தியா சுமார் 131 பில்லியன் UPI ட்ரேன்செக்சன்களைப் பதிவு செய்துள்ளதாகக் கூறியிருந்தார். UPI யின் பிரபலம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், UPI சேவைகளை ஒருங்கிணைக்க இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI) மேலும் மேலும் நிறுவனங்களை ஊக்குவித்து வருகிறது.

Swiggy யின் வருவாய் மற்றும் வளர்ச்சித் தலைவர் அனுராக் பங்கனமாமுலா கூறுகையில், ‘எங்கள் கஸ்டமர்களுக்கு UPI சேவையை அறிமுகப்படுத்துவதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். UPI மிகவும் விருப்பமான கட்டண விருப்பங்களில் ஒன்றாகும். அத்தகைய சூழ்நிலையில், இந்த விருப்பம் கன்ஸ்யுமருக்கு சிறந்த வசதிகளை வழங்குவதற்கான ஸ்விக்கியின் நோக்கத்துடன் ஒத்துப்போகிறது. ட்ரேன்செக்சன்களை எளிதாக்குவதன் மூலமும், கட்டணத் தோல்விகளைக் குறைப்பதன் மூலமும், இந்த அம்சம் Swiggy யில் கன்ஸ்யுமார் அனுபவத்தை மேம்படுத்தும் என்று நாங்கள் நம்புகிறோம்.”என கூறினார்.

Swiggy UPIபேமன்ட் எப்படி செட் செய்வது?

Swiggy UPIபேமன்ட் எப்படி செட் செய்வது?

  • முதலில் உங்கள் போனில் Swiggy ஆப் திறக்க வேண்டும்.
  • திரையின் மேல் வலது மூலையில் உள்ள ஐகானைத் தட்டுவதன் மூலம் ப்ரோபைல் பகுதிக்குச் செல்லவும்.
  • அதில் Payments & Refunds ஆப்ஷன் தெரியும் மற்றும் இப்பொழுது பேமன்ட் மோட் ஆப்சனை இந்த லிஸ்ட்டிலிருந்து செலக்ட் செய்ய வேண்டும்.
  • Swiggy UPI மேலே பணம் செலுத்தும் முறையாக தோன்றும். அதைத் தட்டவும் மற்றும் One Time ரெஜிஸ்ட்ரேசன் செயல்முறையைத் தொடங்கவும்.
  • SMS அனுப்புவதன் மூலம் இந்த விருப்பம் மொபைல் நம்பரை சரிபார்த்து, அதனுடன் லிங்க் செய்யப்பட்டிருக்கும் பேங்க் அக்கவுண்ட்கள் லிஸ்ட் காட்டப்படும்
  • நீங்கள் லிங்க் செய்ய விரும்பும் பேங்க் அக்கவுண்டை தேர்ந்தெடுக்கவும், செயல்முறை முடிந்தது.

இதையும் படிங்க: நீங்கள் எதிர்ப்பார்த்து காத்து கொண்டிருந்த Google Pixel 9 சீரிஸ் அறிமுகம்

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :