Spotify ஆப் இந்தியாவில் அதிக டவுன்லோடு பெற்றுள்ளது

Updated on 05-Mar-2019
HIGHLIGHTS

Spotify டெக்னாலஜி உலகின் அதிக பிரபலமான கட்டண மியூசிக் ஸ்டிரீமிங் சேவையாக இருக்கிறது. இந்தியாவில் சில தினங்களுக்கு முன் இந்த சேவை ஆரம்பமாகியது .

Spotify  டெக்னாலஜி உலகின் அதிக பிரபலமான கட்டண மியூசிக் ஸ்டிரீமிங் சேவையாக இருக்கிறது. இந்தியாவில் சில தினங்களுக்கு முன் இந்த சேவை ஆரம்பமாகியது .

இந்நிலையில், சேவை துவங்கிய ஒரு வாரத்திற்குள் சுமார் பத்து லட்சத்திற்கும் அதிகமானோர் ஸ்பாடிஃபை சேவையை பயன்படுத்த துவங்கி இருக்கின்றனர். இதில் கட்டணம் மற்றும் இலவச சேவையும் அடங்கும். கடந்த வாரம் செவ்வாய் கிழமை (பிப்ரவரி 26) ஸ்பாடிஃபை இந்தியாவிலும் துவங்கப்பட்டது.

இந்தியாவில் ஸ்பாடிஃபை பயன்படுத்த விரும்புவோர் இலவசமாகவும் கட்டணம் செலுத்தியும் சேவையை பயன்படுத்தலாம். இலவசமாக கிடைக்கும் சேவையில் விளம்பரங்கள் இடம்பெற்றிருக்கும். பணம் செலுத்தி  பயன்படுத்தும் போது விளம்பரங்கள் இருக்காது.

கட்டண சேவையின் படி பயனர்கள் மாதம் ரூ.119 கட்டணமாக செலுத்த வேண்டும். இந்தியாவில் சுமார் 40 கோடி பேர் ஸ்மார்ட்போன் பயன்படுத்தி வரும் நிலையில், ஸ்வீடன் நாட்டை சேர்ந்த ஸ்பாடிஃபை நிறுவனத்திற்கு இந்தியா மிகப்பெரிய சந்தையாக இருக்கிறது. இதன் மூலம் அந்நிறுவனம் வருவாய் ரீதியில் வெற்றி பெறவும் அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

இதுதவிர உலகம் முழுக்க ஸ்பாடிஃபை சேவையை சுமார் 9.6 கோடி பேர் சந்தாதாரர்களாக இருக்கின்றனர். இந்தியாவில் ஸ்பாடிஃபை சேவைக்கு அமேசானின் பிரைம் மியூசிக், ஆல்ஃபாபெட் கூகுள் பிளே மியூசிக் மற்றும் சியோமியின் ஹங்காமா உள்ளிட்டவற்றுக்கு போட்டியாக அமைந்திருக்கிறது.

தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் டென்சென்ட் நிறுவனத்தின் காணா செயலியை இந்தியாவில் ஒவ்வொரு மாதமும் சுமார் எட்டு கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர். ஸ்பாடிஃபை சேவையை உலகம் முழுக்க ஒவ்வொரு மாதமும் சுமார் 20.7 கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர். 

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :