வாட்ஸ்அப் வெப் சேவையிலும் டார்க் மோட் வசதி வழங்கப்பட இருக்கிறது. இந்த அம்சம் ஏற்கனவே ஆண்ட்ராய்டு மற்றும் IOS பதிப்புகளில் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. எனினும், வாட்ஸ்அப் வெப் தளத்தில் இதுவரை டார்க் மோட் வசதி வழங்கப்படாமல் இருந்தது.
தற்சமயம் இந்த அம்சம் பீட்டா பதிப்பில் வழங்கப்பட்டு இருக்கிறது. வாட்ஸ்அப் வெப் தளத்தில் உடனே டார்க் மோட் வசதியை பயன்படுத்த முடியும்.இந்நிலையில், வாட்ஸ்அப் வெப் தளத்தில் டார்க் மோட் வசதி வழங்குவதற்கான பணிகளை அந்நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.
இவ்வாறு செய்ததும், ஸ்க்ரீனில் மேல்புறம் ‘body class=web’ எனும் குறியீடுகளை காண முடியும். அதில் ‘web’எனும் வார்த்தைக்கு பதில் ‘web dark’ என டைப் செய்து என்டர் பட்டனை க்ளிக் செய்ய வேண்டும். இவ்வாறு செய்ததும், வாட்ஸ்அப் வெப் தளத்தில் டார்க் மோட் செயல்படுத்தப்பட்டு இருக்கும்.
இதற்கு ஸ்மார்ட்போனில் வாட்ஸ்அப் செயலியை திறந்து வாட்ஸ்அப் வெப் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும். இனி கணினியில் வாட்ஸ்அப் வெப் வலைதளம் திறந்து அதிலுள்ள கியூ ஆர் கோடினை ஸ்மார்ட்போன் கொண்டு ஸ்கேன் செய்ய வேண்டும். கணினியில் வாட்ஸ்அப் திறந்ததும், ரைட் க்ளிக் செய்து இன்ஸ்பெக்ட் எனும் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.
எதிர்காலத்தில் வாட்ஸ்அப் வெப் தளத்தில் டார்க் மோட் அம்சத்தை செயல்படுத்த தனி ஆப்ஷன் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.