ஸ்னாப்சாட் ஆப்யில் லென்ஸ் சேலஞ்சஸ் என்ற பெயரில் புதிய அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது. அந்த புதிய அம்சத்தை பற்றி பேசினால் அது தன் டிக்டாக் போன்ற ஆப் , இந்த ஆப் தற்போது மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருக்க கூடிய ஒரு ஆப் ஆகும். இந்த அம்சம் கொண்டு பயனர்கள் மற்ற பயனர்களுடன் சவால்களில் பங்கேற்க முடியும்.
இந்த புதிய அம்சத்தை பயன்படுத்துவோர் தனது ஸ்னாப்களை உருவாக்க வேண்டும், இதற்க்கு ஸ்னாப்களில் , பாடல், டான்ஸ், காமெடி, மற்றும் விளம்பரம் சார்ந்த நிகழ்வு போன்றதை நீங்கள் இதில் போடலாம், இதனுடன் போட்டியாக செய்வது என்றால் பாடலுக்கு ஒருவருவருடன் மற்றொருவர் படுவது உதாரணத்துக்கு பாடலில் வரும் இரு நபர் குரல் போல பட வேண்டும் அதுவே சவால் அம்சம் ஆகும்
இந்த அம்சம் ஸ்னாப்சாட் மற்றும் லென்ஸ் க்ரியேட்டர்களின் கற்பனை, திறமை மற்றும் சுய வெளிப்பாடு உள்ளிட்டவற்றை வெளிப்படுத்த வாய்ப்பாக அமையும் என ஸ்னாப்சாட் தெரிவித்துள்ளது. புதிய சேலஞ்சர் அம்சம் பயன்படுத்துவோர் லென்ஸ் ஸ்டூடியோவை பயன்படுத்துவார்கள் என ஸ்னாப்சாட் எதிர்பார்க்கிறது.
லென்ஸ் சேலஞ்ச் அம்சத்தின் முதல் சவாலாக மறைந்து போகச் செய்வது இருந்தது. இந்த லென்ஸ் ஜை ட்ரூடிங்கர் மூலம் உருவாக்கப்பட்டது. இது பயனர்கள் இரண்டு போட்டோக்களில் சூப்பர்இம்போஸ் வகையில் எடுக்க வேண்டும். இவ்வாறு செய்யும் போது போட்டோக்குள் இருக்கும் பொருள் மறைந்து போகும்.