ஸ்கைப் ஆப்யில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. சில தினங்களுக்கு முன் ஆப் மேலும் எளிமையாக்கும் நோக்கில் ஹைலைட்ஸ் மற்றும் கேப்ச்சர் போன்ற அம்சங்களை மைக்ரோசாஃப்ட் நிறுவனம் எடுத்தது.
அந்த வகையில், ஸ்கைப் கால் செய்யும் போது அவற்றை ரெக்கார்டு செய்யும் வசதி சேர்க்கப்பட்டுள்ளது. இந்த அம்சம் முழுமையாக கிளவுட் சார்ந்து இயங்கும் என மைக்ரோசாஃப்ட் தெரிவித்துள்ளது. மேம்படுத்தப்பட்ட பதிப்பில் புதிய அம்சம் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், விண்டோஸ் 10 தவிர மற்ற இயங்குதளங்களில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய அம்சம் தற்சமயம் வழங்கப்படாத நிலையில் விண்டோஸ் 10 தளத்திற்கு வரும் வாரங்களில் வழங்கப்படும் என மைக்ரோசாஃப்ட் உறுதி அளித்துள்ளது. அழைப்புகளை பதிவு செய்யும் போது மறுமுனையில் இருக்கும் அனைவருக்கும் அழைப்பு பதிவு செய்யப்படுவதை குறிக்கும் நோட்டிஃபிகேஷன் அனுப்பப்படும்.
பதிவு செய்யப்பட்ட அழைப்புகளை பயனர்கள் அடுத்த 30 நாட்களுக்குள் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளவோ அல்லது சேமித்துக் கொள்ளும் வசதி கொண்டுள்ளது.
டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்களில் அழைப்புகளை பதிவு செய்ய, திரையின் கீழே காணப்படும் "+" குறியை க்ளிக் செய்து, பதிவு செய்ய துவங்கலாம். மொபைல் செயலியில் அழைப்புகளை பதிவு செய்ய வட்ட வடிவில் காணப்படும் "+" குறியை க்ளிக் செய்ய வேண்டும்.
பதிவு செய்யப்பட்ட கால்களை டெஸ்க்டாப் கம்ப்யூட்டரில் பதிவு செய்ய, சாட் ஸ்கிரீன் சென்று மோர் — சேவ் டு டவுன்லோடு ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும். இவ்வாறு செய்ததும், அழைப்பு பயனரின் டவுன்லோடு ஃபோல்டரில் பதிவு செய்யப்படும். மொபைலில் ரெக்கார்டெட் கால் ஆப்ஷனை க்ளிக் செய்து, அழுத்திப் பிடிக்க வேண்டும்.
கம்ப்யூட்டர் மற்றும் மொபைலில் பதிவு செய்யப்படும் அழைப்புகள் MP4 வடிவில் சேமிக்கப்படும்.