ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது சேவையை மிகவும் குறைந்த விலையில் வழங்கி, டெலிகாம் சந்தையில் பல்வேறு மாற்றங்களுக்கு வித்திட்டது. டெலிகாம் சேவையை தவிர பல்வேறு இலவச செயலிகளையும் ஜியோ வழங்கி வருகிறது.
ஜியோ தனது பயனர்களுக்கு ஜியோ சினிமா மற்றும் ஜியோ டி.வி. உள்ளிட்டவற்றை வழங்கியதை தொடர்ந்து தற்சமயம் ஜியோக்ரூப்டாக் எனும் செயலியை அறிமுகம் செய்துள்ளது. இந்த செயலியை கொண்டு ஜியோ பயனர்கள் க்ரூப் கான்ஃபெரன்ஸ் அழைப்புகளை மேற்கொள்ளலாம்.
ஏற்கனவே கூகுள் பிளே ஸ்டோரில் கிடைக்கும் இந்த செயலியை பயனர்கள் தங்களது ஜியோ நம்பர் கொண்டு பயன்படுத்த முடியும். சில நாட்களுக்கு மட்டும் ஜியோக்ரூப்டாக் செயலி சோதனை செய்யப்படுகிறது. இந்த செயலியை கொண்டு ஜியோ சேவையை பயன்படுத்தாதவர்களுடனும் பேச முடியும்.
கான்ஃபெரன்ஸ் அழைப்புகளை மேற்கொள்ளும் போது பயனர்கள் எப்போது மற்றவர்களை சேர்க்க வேண்டும் என்றும், எப்போது தனியாக மியூட் செய்ய வேண்டும் என்றும் க்ரூப் மியூட் அல்லது மீண்டும் அவர்களை இணைப்பது போன்றவற்றை மேற்கொள்ளும் வசதி வழங்கப்படுகிறது.
இந்த செயலியில் லெக்ச்சர் எனும் மோட் வழங்கப்பட்டுள்ளது. இந்த மோட் பயன்படுத்தி, பயனர்கள் இதர க்ரூப் கான்ஃபெரன்ஸ் அழைப்புகளில் இருப்பவர்களை மியூட் செய்ய வேண்டும். தற்சமயம் இந்த செயலியை கொண்டு ஆடியோ அழைப்புகளை மட்டும் மேற்கொள்ள முடியும். விரைவில் இந்த செயலியை கொண்டு வீடியோ கால் அல்லது க்ரூப் சாட் செய்ய முடியும்.
எப்படி பயன்படுத்துவது Reliance JioGroupTalk
நீங்கள் இந்த ஆப் பயன்படுத்த விரும்பினால் நீங்கள் இதை கூகுல் பிளே ஸ்டோரிலிருந்து டவுன்லோடு செய்து கொள்ளலாம். அதன் பிறகு நீங்கள் உங்களின் ஜியோ நம்பரில் இந்த ஆப் சைன் இன் செய்ய வேண்டும் பிறகு உங்கள் மொபைல் நம்பருக்கு ஒரு OTP வரும். நீங்கள் அந்த OTP பயன்படுத்தி லோக் இன் செய்ய வேண்டும். இருப்பினும் இந்த ஆப் இதுவரை ட்ராயலில் தான் இருக்கிறது. இன்னும் சில நாட்களுக்குள் இந்த ஆப் அனைவருக்கும் கிடைத்துவிடும். இப்பொழுது இந்த ஆப் வெறும் ஜியோ அப்ளிகேஷனில் மட்டும் இருக்கிறது. இப்பொழுது நீங்கள் இதை சைன் இன் செய்ய வேண்டும் என்று நினைத்தால் ஜியோ நம்பர் அவசியம் தேவைப்படும்
இருப்பினும் நீங்கள் இந்த சேவையை பெற வேண்டும் நினைத்தால் உங்களிடம் ஜியோ சிம் மற்றும் அதை தவிர VoLTE சேவை சப்போர்டில் இருக்க வேண்டும் மற்றும் இதனுடன் உங்களின் இன்டர்நெட் சேவை சரியான முறையில் வேலை செய்ய வேண்டும். நீங்கள் இந்த ஆப் எளிதாக பயன்படுத்தலாம்.
எங்களது டிஜிட் தமிழ் இப்பொழுது டெலிகாரமிளும் எங்களது சேனலை ஷாப்கரைப் செய்து கொள்ளுங்கள்