Reliance Jio நிறுவனம் TITOK யில் முதலீடு செய்ய பேச்சுவார்த்தை

Updated on 14-Aug-2020
HIGHLIGHTS

ByteDance நிறுவனம் டிக்டாக்கில் முதலீடு செய்வது பற்றி ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் உடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

சீனாவை சேர்ந்த சுமார் 59 செயலிகளை பயன்படுத்த தடை விதித்தது

ரிலையன்ஸ், பைட்-டேன்ஸ் மற்றும் டிக்டாக் சார்பில் இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கப்படவில்லை

சீனாவை பூர்வீகமாக கொண்டு இயங்கும் பைட்-டேன்ஸ் நிறுவனம் டிக்டாக்கில் முதலீடு செய்வது பற்றி ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் உடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. 

முன்னதாக மத்திய அரசு டிக்டாக் வீசாட் உள்பட சீனாவை சேர்ந்த சுமார் 59 செயலிகளை பயன்படுத்த தடை விதித்தது. சீனாவுடனான எல்லை பிரச்சினை காரணமாக இந்தியாவின் பாதுகாப்புக்கு இந்த செயலிகள் அச்சுறுத்தலை ஏற்படுத்தலாம் என்பதால் இவை தடை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

டிக்டாக்கில் முதலீடு செய்வது தொடர்பாக இரு நிறுவனங்களிடையே கடந்த மாதம் பேச்சுவார்த்தை துவங்கி இருப்பதாகவும், இந்த விவகாரத்தில் இதுவரை எந்த முடிவும் எட்டப்படவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து ரிலையன்ஸ், பைட்-டேன்ஸ் மற்றும் டிக்டாக் சார்பில் இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கப்படவில்லை. 

கடந்த வாரம் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் டிக்டாக் மற்றும் வீசாட் செயலிகளை தடை செய்யப்போவதாக அறிவித்து, சமீபத்தில் அதற்கான கோப்புகளிலும் டிரம்ப் கையெழுத்திட்டார். இதனிடையே மைக்ரோசாப்ட் நிறுவனம் டிக்டாக்கை வாங்குவதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு உள்ளதாக தெரிவித்து இருந்தது.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :