மார்ச் 15 முதல் Paytm Payments Bank (PPBL) டெபாசிட்கள், கடன் பரிவர்த்தனைகள் மற்றும் FASTag ரீசார்ஜ் போன்ற சேவைகளில் இருந்து தடை
Paytm Payments பேங்க் கஸ்டமர் அக்கவுண்ட்கள் wallet Fastag மற்றும் பிற சாதனங்களில் டெபாசிட் அல்லது டாப்-அப்களை ஏற்காது
Paytm யில் என்னென்ன விஷயங்கள் வேலை செய்யும், எது நடக்காது என்பது தெளிவாக பார்க்கலாம்
மார்ச் 15 முதல் Paytm Payments Bank (PPBL) டெபாசிட்கள், கடன் பரிவர்த்தனைகள் மற்றும் FASTag ரீசார்ஜ் போன்ற சேவைகளில் இருந்து தடை செய்யப்பட்டுள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி (RBI) உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம், Paytm Payments பேங்க் கஸ்டமர் அக்கவுண்ட்கள் wallet Fastag மற்றும் பிற சாதனங்களில் டெபாசிட் அல்லது டாப்-அப்களை ஏற்காது. இதுபோன்ற சூழ்நிலையில், பலர் இந்த விஷயங்களுக்கு Paytm ஐப் பயன்படுத்துகிறார்கள், அவர்கள் சிக்கல்களைச் சந்திக்க வேண்டியிருக்கும். மார்ச் 15க்குப் பிறகு Paytm யில் என்னென்ன விஷயங்கள் வேலை செய்யும், எது நடக்காது என்பது தெளிவாக பார்க்கலாம்
Paytm யின் எந்த எந்த சேவை pan படுத்த முடியாது
பணத்தை டெபாசிட் செய்தல்: மார்ச் 15 முதல் பயனர்கள் தங்கள் PPBL அக்கவுன்ட்களில் பணத்தை டெபாசிட் செய்ய முடியாது. அதாவது சம்பளக் கடன், DBT அல்லது சப்சிடி உங்கள் அக்கவுண்டை பயன்படுத்துவதை நிறுத்தும்.
UPI செயல்பாடு: மார்ச் 15 முதல் உங்களால் ஒருங்கிணைந்த பேமன்ட் இன்டர்பேஸ் (UPI) பயன்படுத்த முடியாது.
IMPS செயல்பாடு :மார்ச் 15 முதல் கஸ்டமர் தங்கள் PPBL அக்கவுண்ட்கள் மூலம் இன்ஸ்டன்ட் பேமன்ட் சேவை (IMPS)செயல்பாட்டையும் பயன்படுத்த முடியாது.
NCMC கார்டு: PPBL ஆல் வழங்கப்பட்ட அவர்களின் தேசிய பொது மொபிலிட்டி கார்டில் (NCMC) உங்களால் ரீசார்ஜ் செய்யவோ அல்லது டாப்-அப் செய்யவோ முடியாது.
ஃபாஸ்டாக் ரீசார்ஜ்: இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) ஒரு ஆலோசனையில், PPBL வழங்கும் Fastag ஐ நீங்கள் ரீசார்ஜ் செய்ய முடியாது என்றும், வேறு எதாவது பேங்க் வழங்கும் புதிய Fastag ஐ வாங்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.
மார்ச் 15பிறகு எந்த எந்த சேவை பயன்படுத்தத் முடியும்.
பயனர்கள் எந்தவித இடையூறும் இல்லாமல் Paytm ஆபபயன்படுத்த முடியும்.
Paytm QR கோட் சவுண்ட்பாக்ஸ் மற்றும் கார்டு மெசின்களுக்கு முழுமையாக செயல்படும்.
Paytm ஆப்யில் திரைப்படங்கள், நிகழ்வுகள், பயணம், மெட்ரோ, விமானம், ரயில், பேருந்து ஆகியவற்றுக்கான டிக்கெட்டுகளை நீங்கள் புக்கிங் செய்ய முடியும்.
மார்ச் 15க்குப் பிறகும் Paytm டீல் தொடரும். பயனர்கள் அனைத்து சலுகைகளையும் தள்ளுபடிகளையும் அனுபவிக்க முடியும்.
Paytm ஆப்யிளிருந்து சிலிண்டர் புக்கிங்,, கேஸ் பைப் பில், அப்பார்ட்மெண்ட் எலெக்ட்ரிசிட்டி பில் போன்ற பேமன்ட்களை செய்ய முடியும்.
Paytm ஆப்யிளிருந்து நீங்கள் பீமா இன்சூரன்ஸ் வாங்கலாம் மற்றும் உங்கள் இன்சூரன்ஸ் பிரீமியத்தை செலுத்தலாம்.
பைக், கார், ஹெல்த் மற்றும் பிறவற்றிற்கான புதிய இன்சூரன்ஸ் பாலிசியை நீங்கள் வாங்கலாம் மற்றும் Paytm ஆப் மூலம் பிரீமியத்தைச் செலுத்தலாம்.
Paytm ஏற்கனவே HDFC வங்கி Fastags வழங்குகிறது மற்றும் பிற கூட்டாளர் பேங்க்களில் Fastag ரீசார்ஜ் Paytm பயன்பாட்டில் வழங்கப்படுகிறது, ஆனால் நீங்கள் Paytm Payments Bank Fastags ஐ வாங்க முடியாது. ஆனால் மார்ச் 15க்கு முன் ரீசார்ஜ் செய்து, நிலுவைத் தொகை தீரும் வரை பயன்படுத்த முடியும்.
ஆப்யில் டிஜிட்டல் தங்கத்தை நீங்கள் தொடர்ந்து வாங்கலாம் அல்லது விற்கலாம்.
உங்கள் கிரெடிட் கார்டு பேமன்ட் Paytm ஆப்ஸில் செலுத்தலாம்.
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.