பதாஞ்சலி கிம்போ ஆப் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளது

Updated on 04-Jun-2018
HIGHLIGHTS

வாட்ஸ்அப் செயலிக்கு போட்டியாக பதாஞ்சலி அறிமுகம் செய்த கிம்போ ஆப் ஆன்ட்ராய்டு மற்றும் IOS பிளே ஸ்டோர்களில் இருந்து வந்த வேகத்தலே நீக்கப்பட்டது .

பாபா ராம்தேவின் பதாஞ்சலி கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் கிம்போ எனும் மெசேஜ் செயலியை வாட்ஸ்அப் செயலிக்கு போட்டியாக வெளியிட்டது. 

ஆன்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இயங்குதளங்களில் வெளியான சில மணி நேரங்களில் செயலியின் பாதுகாப்பு குறித்து பலரும் குற்றஞ்சாட்டினர். பாதுகாப்பு வல்லுநர்கள் செயலியின் பாதுகாப்பு குறித்த விமர்சனங்களை தொடர்ந்து தெரிவித்து வந்த நிலையில் வெளியான ஒரே நாளில் கிம்போ செயலி ஆன்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் பிளே ஸ்டோர்களில் இருந்து நீக்கப்பட்டதோடு அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளது.

செயலி நீக்கப்பட்டதை ட்விட்டர் தளத்தில் தெரிவித்திருக்கும் கிம்போ பிளே ஸ்டோர்களில் கிம்போ பெயரில் இருக்கும் மற்ற போலி செயலிகளுக்கு நாங்கள் பொறுப்பல்ல என குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக செயலியை நீக்கியதற்கு அதிகப்படியான வரவேற்பு தான் முக்கிய காரணம் என கிம்போ சார்பில் தெரிவிக்கப்படுகிறது. எனினும் பாதுகாப்பு வல்லுநர்கள் இந்த காரணத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என்ற வாக்கில் தகவல் தெரிவித்துள்ளனர்.

பிளே ஸ்டோரில் கிம்போ ஆப் என டைப் செய்தாலே, ஒரே பெயரில் சில எழுத்து மாற்றங்களுடன் பல செயலிகள் வெவ்வேறு டெவலப்பர்களின் பெயரில் இடம்பெற்றிருக்கின்றன. நாளுக்கு நாள் கிம்போ பெயரில் கிடைக்கும் போலி செயலிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்பதால் வாடிக்கையாளர்கள் இவற்றை டவுன்லோடு செய்யாமல் இருப்பது நல்லது. 

ஏற்கனவே குறிப்பிடப்பட்டதை போன்று அதிகாரப்பூர்வ கிம்போ ஆப் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டு விட்டது. எனினும் பதாஞ்சலி சார்பில் வெளியிடப்பட்டு இருக்கும் தகவல்களில் இந்த செயலி விரைவில் மீண்டும் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :