digit zero1 awards

கிம்போ ஆப் மீண்டும் புதிய பெயரில் அறிமுகமாகிறது…!

கிம்போ ஆப் மீண்டும் புதிய பெயரில் அறிமுகமாகிறது…!
HIGHLIGHTS

இந்தியாவில் மே 28-ம் தேதி முதல் முறையாக அறிமுகம் செய்யப்பட்ட கிம்போ ஆப் அப்டேட் செய்யப்பட்டு போலோ மெசன்ஜர் ஆப் என்ற பெயரில் மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. ஜூலை 13-ம் தேதி கூகுள் பிளே ஸ்டோரில் இந்த ஆப் வெளியாகியிருக்கிறது.

பதாஞ்சலியின் இந்தியாவில் உருவாக்கப்பட்ட மெசேஜ் ஆப் வாட்ஸ்அப்-க்கு போட்டியாக அறிமுகம் செய்யப்பட்டது. கிம்போ என்ற பெயரில் வெளியிடப்பட்ட ஆப் பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதாக பாதுகாப்பு வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்த நிலையில், ஆப் வெளியான 24 மணி நேரத்தில் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டது.

இந்தியாவில் மே 28-ம் தேதி முதல் முறையாக அறிமுகம் செய்யப்பட்ட கிம்போ ஆப் அப்டேட் செய்யப்பட்டு போலோ மெசன்ஜர் ஆப் என்ற பெயரில் மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. ஜூலை 13-ம் தேதி கூகுள் பிளே ஸ்டோரில் இந்த ஆப் வெளியாகியிருக்கிறது.

கிம்போ செயலிக்கு எதிர்பார்த்ததை விட அதிகளவு வரவேற்பு கிடைத்திருப்பதை தொடர்ந்து சர்வெர் பற்றாகுறை காரணமாக செயலி நீக்கப்படுவதாக பதாஞ்சலி செய்தி தொடர்பாளர் தெரிவித்திருந்தார். எனினும் செயலியில் பாதுகாப்பு குறைபாடு இருப்பதை டெவலப்பர்கள் ஏற்றுக் கொண்டு, கிம்போ செயலி பிழைகளை சரி செய்து மீண்டும் வெளியிடுவதாக பதாஞ்சலி அறிவித்திருந்தது

வாட்ஸ்அப் ஐகான் போன்றே காட்சியளிக்கும் கிம்போ ஆப் ஐகான் புதிய செயலியில் இடம்பெற்றிருக்கிறது. அந்த வகையில் கிம்போ ஆப் மீண்டும் புதிய பெயரில் வெளியிடப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. இதுகுறித்து ட்விட்டர் பதிவுகளில் இந்த செயலி கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வெளியான போலோ ஆப்-ஐ தழுவி உருவாக்கப்பட்டு இருப்பதாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

புதிய போலோ ஆப் பாதுகாப்பு குறித்து விளக்கமளிக்க ஆப்யின்  டெவலப்பரான அதித்தி கமல் ட்விட்டரில் ஆராய்ச்சியளர் எலியட் ஆல்டெர்சனுக்கு செயலியை ஹேக் செய்யுமாறு சவால் விடுத்திருந்தார். சவாலை ஏற்றுக் கொண்ட ஆராய்ச்சியாளர் எலியட் சில மணி நேரங்களில் செயலியில் உள்ள பிழைகளை கண்டறிந்து, தெரிவித்திருக்கிறார்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo