நமது மொபைலுக்கு ரீசாஜ் செய்வது தொடங்கி , ஆன்லைன் ஷாப்பிங் செய்வது, வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்குவது என்று அனைத்துக்கும் வங்கிக் கணக்கில் இருந்து பணப்பரிவர்த்தனை செய்கிறோம்.
அப்படி டெபிட் கார்டு மூலம் வங்கிக்கணக்கை பயன்படுத்தும் போது ஓடிபி என்ற ஒரு முறை கடவுச்சொல் நமது மொபைலுக்கு வரும். இந்த ஓடிபி-ஐய பொதுவாக நம்மால் எளிதில் காப்பி செய்ய முடியாது.
இந்த சிக்கலுக்கு தற்போது ட்ரூகாலர் ஆப் தீர்வு கண்டுள்ளது. இதை செய்ய ட்ரூகாலர் ஆபின் SMS- நாம் ஆக்டிவேட் செய்ய வேண்டும் .
இதன் மூலம் ஏற்கனவே உள்ள மெசேஜ் ஆப் மாற்றப்பட்டு, ட்ரூ காலரின் மெசெஜ்ஆப்பாக மாறிவிடும் .
இந்நிலையில், உங்களுக்கு ஓடிபி எஸ்எம்எஸ் வரும்போது , எண்கள் மட்டும் பிரதி எடுக்க ஆப்ஷன் கொடுக்கப்படும் . அதை பயன்படுத்து நீங்கள் ஓடிபி எண்களை பிரதி எடுக்கலாம் .
மேலும் விலாஷ் மெசேஜ் மூலம் 30 நொடிகளில் உங்கள் எஸ் எம் எஸ்க்கான ரிப்ளே வசதியும் பெற முடியும் ..