கூகுளில் புதிய அம்சமான ஷெட்யூல் வசதி வழங்கப்பட்டுள்ளது.

கூகுளில்  புதிய  அம்சமான ஷெட்யூல் வசதி வழங்கப்பட்டுள்ளது.
HIGHLIGHTS

ஈமெயில்களை அனுப்ப ஷெட்யூல் செய்யும் வசதியும் சேர்க்கப்பட்டுள்ளது.

கூகுளின் ஜிமெயில் சேவை துவங்கி 15 ஆண்டு கொண்டாட்டத்தின் புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. அந்த வகையில் ஜிமெயில் சேவையின் ஸ்மார்ட் கம்போஸ் அம்சம் முன்பை விட மேம்படுத்தப்பட்டுள்ளது. இத்துடன் ஈமெயில்களை அனுப்ப ஷெட்யூல் செய்யும் வசதியும் சேர்க்கப்பட்டுள்ளது. 

கூடுதலாக ஸ்மார்ட் கம்போஸ் அம்சம் பயனரின் எழுத்து முறைகளை கற்றுக் கொண்டு, மின்னஞ்சல்களை எழுதும் போது அவர்களுக்கு ஏற்றவாரு பரிந்துரைகளை வழங்கும் என கூகுள் அறிவித்துள்ளது. இவற்றுடன் ஜிமெயில் தளத்தை விட்டு வெளியேறாமல் சில அம்சங்களை இயக்கும் வசதியும் சேர்க்கப்பட்டுள்ளது.

இதில் பயனர்கள் ஈமெயில் செல்ல வேண்டிய நேரத்தை சரியாக நிர்ணயிக்கவோ அல்லது ஜிமெயில் பரிந்துரைக்கும் நேரத்தில் அனுப்பவோ முடியும். தற்சமயம் இந்த அம்சம் ஜிமெயில் வெப் தளத்தில் மட்டும் வழங்கப்பட்டிருக்கிறது. ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். மொபைல் செயலிகளில் இந்த அம்சம் வழங்குவது பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை.

ஜிமெயில் தளத்தின் புதிய அம்சங்களில் ஈமெயில் ஷெட்யூல் வசதி மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. பெயருக்கு ஏற்றார்போல் புதிய அம்சம் கொண்டு பயனர் விரும்பும் நேரத்தில் மின்னஞ்சல்களை அனுப்ப முடியும். இதனை பயன்படுத்த மின்னஞ்சலை டைப் செய்து சென்ட் பட்டனை க்ளிக் செய்து மின்னஞ்சல் செல்ல வேண்டிய நேரத்தை தேர்வு செய்ய வேண்டும்.

இத்துடன் ஸ்மார்ட் கம்போஸ் அம்சம் ஒவ்வொரு பயனர் எழுதும் முறைகளை கற்றுக் கொண்டு அவர்களுக்கு ஏற்ற பரிந்துரைகளை வழங்கும். ஸ்மார்ட் கம்போஸ் அம்சம் ஆண்ட்ராய்டு தளத்தில் வழங்குவது பற்றி கூகுள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்,IOS. தளத்தில் இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது..

மேலும் ஸ்மார்ட் கம்போஸ் அம்சம் – ஃபிரெஞ்சு, இத்தாலி, போர்த்துக்கீசு மற்றும் ஸ்பானிஷ் உள்ளிட்ட மொழிகளுக்கான வசதியை பெற்றிருக்கிறது. இறுதியில் கூகுள் நௌ அம்சத்தில் கூகுள் டாக் கமென்ட்களுக்கு பதில் எழுதும் வசதி வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு செய்ய பயனர்கள் மின்னஞ்சலை விட்டு வேறு பிரவுசர் திறக்க வேண்டிய அவசியம் கிடையாது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo