நீங்கள் தனியாக பயணிக்கும் நபரா இனி கவலை வேண்டாம் கூகுள் மேப்பின் புதிய Stay Safer உங்களை பாதுகாக்கும்
உங்க பொன்னை தனியா ஆட்டோல அனுப்பீர்களா கவலையே வேண்டாம் கூகுள் மேப் ஒரு புதிய Stay Safer என்ற அம்சத்தை கொண்டு வந்துள்ளது.
இன்றைய கால கட்டத்தில் தினசரி பெண்கள் ஒரு இடத்திற்க்கு சுதந்திரமாக அனுப்புவதற்கு பெற்றோர் மிகவும் பயந்து கொண்டு தான் வருகிறார்கள் மேலும் நாட்டில் வர வர அதிகம் பெண்களுக்கு பாலியல் தொல்லை போன்ற பல பிரச்சனை சந்தித்து வரும் நிலையில் கூகுள் இத்தகைய பிரச்சனை சரி செய்ய கூகுள் நிறுவனம் Stay Safer feature என்ற புதிய அம்சத்தை கொண்டு வந்துள்ளது.
மேலும் தினசரி பெண்கள் வேலை மற்றும் பல சூழ்நிலையில் தனியாக பயணிக்கும் நிலை ஏற்படுகிறது, மேலும் தற்போது சூழ்நிலையில் ஒரு பெண் தனியாக இரவில் ஆட்டோ மற்றும் ரிக்ஸாவில் பயணிக்கும்பொழுது நாம் பல மடங்கு அச்சம் கொள்கிறோம் அவர் சரியாக சென்றார் இல்லையா என்று மேலும் அந்த வண்டி சரியாக சேர்ந்ததா இல்லையா பயம் இருக்கும்.
இனி நீங்கள் உங்கள் மகள் அல்லது மனைவி மற்றும் ஒரு நபர் தனியாக ஆட்டோ அல்லது ரிக்ஸாவில் பயணிக்கும்பொழுது அந்த வண்டி வேறு ஒரு இடத்திற்க்கு மாற்றி செல்லும்பொழுது உங்கள் நண்பர் மற்றும் உறவினர்களுக்கு அலர்ட் தரும் ஒரு புதிய அம்சத்தை கூகுள் வழங்கியுள்ளது. கூகுள் மேப்ஸ். Google Maps Stay Safer feature நீங்கள் போகும் வழியை தாண்டி அரை கிலோமீட்டர் தாண்டினாலும் அலர்ட் கொடுக்கப்படுகிறது.
Google Maps Stay Safer feature :இது எப்படி வேலை செய்யும்.? மற்றும் அதை எப்படி ஏக்டிவேட் செய்வது ?
1 நீங்கள் பயணிக்கும் தொடங்கும்பொழுது நீங்கள் செய்ய வேண்டிய விஷயம் உங்களின் மொபைல் போனில் நீங்கள் பயணிக்கு இடத்தை கூகுள் மேப்பில் டைப் செய்து சர்ச்சில் வைக்கவேண்டும் இப்பொழுது உங்களின் மொபைலில் (Stay Safer) (Get off-route alerts என்ற ஆப்சன் வரும் அதில் நீங்கள் க்ளிக் செய்ய வேண்டும்.
2. கூகுள் மேப்பில் உங்களின் நீங்கள் செல்லும் வழிக்கும் வழியைகாட்டும், அப்படி நீங்கள், செல்லும் வழியை ஒரு அரை கிலோமீட்டர் தாண்டினால்,உங்கள போனுக்கு அலர்ட் வருவது மட்டுமில்லாமல் ங்கள் குடும்பத்தினருக்கும் உங்கள் இடம் குறித்த லைவ் அப்டேட் கிடைக்கும். இதன் மூலம் நீங்கள் தற்பொழுது எங்கே பயணித்து கொண்டிருக்கும் என்ற தகவலை உங்கள் குடும்பத்தினக்கும் தெரியப்படுத்தும்.
3 சமீபத்தில் ஸ்பீடோமீட்டர் அப்டேட்டை பயனாளிகளுக்கும் வழங்கியது, கூகுள் மேப். மேலும் நாம் செல்லும் வழியில் இயற்கை பேரழிவு வந்தால் அதில் இருந்து நம்மை காத்துக் கொள்வதற்கான அப்டேட்டினையும் நேவிகேசன் தற்போது பயனாளிகளுக்கு அளித்தது
மேலும் இது போன்ற பல சிறப்பம்சத்தை கூகுள் நமக்கு நன்மையே வழங்குகிறது..
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile