Mitron App கூகிள் பிளே பிளே ஸ்டோரில் புதிய சாதனை பெற்றுள்ளது.
Tiktok செயலிக்கு மாற்றான இந்திய செயலியாக Mitron செயலி அறிமுகம் செய்யப்பட்டது
பிரபலமான மித்ரான் செயலி பிளே ஸ்டோரில் தற்சமயம் 4.5 நட்ச்சத்திர குறியீடுகளை பயனர்களிடம் பெற்று இருக்கிறது
இந்தியாவில் டிக்டாக் செயலிக்கு மாற்றான இந்திய செயலியாக மித்ரான் செயலி அறிமுகம் செய்யப்பட்டது. தற்சமயம் பிளே ஸ்டோரில் அறிமுகமாகி இரண்டே மாதங்களில் இந்த செயலி ஒரு கோடி டவுன்லோடுகளை கடந்துள்ளது. முன்னதாக கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்ட மித்ரான் செயலி, ஜூன் 5 ஆம் தேதி மீண்டும் சேர்க்கப்பட்டது. எனினும், அறிமுகமானது முதல் இந்த செயலி பல்வேறு சர்ச்சைகளை சந்தித்து வந்தது.
முன்னதாக வெளியான தகவல்களில் இந்த செயலிக்கான சோர்ஸ் கோட் பாகிஸ்தான் நாட்டு டெவலப்பரிடம் இருந்து வாங்கப்பட்டது என கூறப்பட்டது. பின் இந்த செயலியினை ஐஐடி ரூர்கி மாணவர் உருவாக்கினார் என தெரியவந்தது. மேலும் இது டிக்டிக் செயலியின் ரீபிராண்டு செய்யப்பட்ட வடிவம் என கூறப்பட்டது.
இதன் பின் பிரபலமான மித்ரான் செயலி பிளே ஸ்டோரில் தற்சமயம் 4.5 நட்ச்சத்திர குறியீடுகளை பயனர்களிடம் பெற்று இருக்கிறது.இந்தியா மற்றும் சீனா இடையேயான சர்ச்சை தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், மக்கள் சீன பொருட்கள் மற்றும் சேவைகளை பயன்படுத்த வேண்டாம் என்ற மனநிலையில் உள்ளதே மித்ரான் செயலி அதிக பிரபலமாக முக்கிய காரணம் என கூறப்படுகிறது. மித்ரான் செயலியை உருவாக்கிய குழு பெங்களூருவை சேர்ந்தது என கூறப்படுகிறது
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile