கூகுள் மேப்பில் மெசேஜ் அனுப்பும் வசதி சேர்க்கப்பட்டுள்ளது..!

கூகுள் மேப்பில்  மெசேஜ்  அனுப்பும்  வசதி சேர்க்கப்பட்டுள்ளது..!
HIGHLIGHTS

கூகுள் மேப்பில் சேர்க்கப்பட்டுள்ள மெசேஜ், பன்சனாலிட்டி மூலம், இப்பொழுது நீங்கள் மெசேஜ் அனுப்பலாம்.

கூகுள் மேப்ஸ் ஆப்யில் புதிய அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது. புதிய அம்சம் மூலம் பயனர்கள் கூகுள் மேப்ஸ் ஆப்யில் இருந்தபடி மெசேஜ் அனுப்பிக் கொள்ளலாம். இருப்பினும், இந்த அம்சத்தின் மூலம் நண்பர்கள் மற்றும் குடும்பத்தாருடன் மெசேஜை அனுப்பிக் கொள்ள முடியாது.

புதிய அம்சம் மூலம் கூகுள் மேப்ஸ் ஆப்யில் லிஸ்ட் செய்யப்பட்டு இருக்கும் வியாபார மையங்களுக்கு மட்டுமே மெசேஜ் அனுப்பிக் கொள்ளலாம் என கூறப்படுகிறது. இதுகுறித்து வெளியாகி இருக்கும் ஸ்கிரீன்ஷாட்களில் கூகுள் மேப்ஸ் பயனர்கள் சிறு வியாபார நிறுவனங்களை தொடர்பு கொள்ள முடியும்.

ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு முதலில் இருந்தே சந்தையில் நிறைய  மெசேஜிங் ஆப் வந்துள்ளது.மற்றும் இந்த புதிய  பீச்சர்  அதாவது, கூகுள் மேப்பின், இன்ஸ்டன்ட் மெசேஜிங் டூல்  வடிவில்  இது இல்லை.

முன்னதாக கூகுள் மேப்ஸ் ஆப்யில் ஆட்டோ ரிக்‌ஷா அம்சம் பொது பயணங்களில் ஒன்றாக சேர்க்கப்பட்டது. இதன் மூலம் பயனர்கள் தேடும் முகவரிக்கு செல்லும் நேரத்தை மேம்படுத்த முடியும். இந்தியாவில் முதற்கட்டமாக டெல்லியில் மட்டும் ஆட்டோ ரிக்‌ஷா அம்சம் வழங்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதன் மூலம் சிறு வியாபார நிறுவனங்கள் எதிர்காலத்தில் அதிகளவு வாடிக்கையாளர்களை ஈர்க்க முடியும். இத்துடன் வியாபார நிறுவனங்களும் வாடிக்கையாளர்களை அழைக்காமல், அவர்களை வேகமாக தொடர்பு கொள்ளலாம்.

இதுதவிர கூகுள் தனது டுயோ செயலியில் வழங்க புதிய அம்சங்களை உருவாக்கும் பணிகளில் கூகுள் ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே வெளியான தகவல்களில் கூகுள் டுயோ செயலியில் லோ லைட் மோட் மற்றும் க்ரூப் வீடியோ காலிங் உள்ளிட்ட வசதிகள் சேர்க்கப்பட இருக்கின்றன.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo