வாட்ஸ்அப்-பில் புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. வாட்ஸ்அப் ப்ரோசரில் யூடியூப் இன்டகிரேஷன் வசதி வாட்ஸ்அப் 2.18.11 எடிசனில் வழங்கப்படுகிறது.
வாட்ஸ்அப் ப்ரோசஸரில் யூடியூப் இன்டகிரேஷன் வழங்கும் யோசனையை அந்நிறுவனம் நீண்ட காலமாக திட்டமிட்டு வந்த நிலையில், தற்போது இதனை ஐபோன்களில் சாத்தியமாக்கியுள்ளது. இந்த வசதியை வழங்கும் பணிகள் துல்லியமாக நடைபெற்று வருகிறது.
வாட்ஸ்அப் ஸ்கிரீனில் யூடியூப் இன்டகிரேஷன் வசதி முதற்கட்டமாக IOS பல்டபோர்மில் மட்டும் வழங்கப்பட்டுள்ளது. இனி வரும் அப்டேட்களில் ஆண்ட்ராய்டு பல்டபோர்மிலும் இந்த அம்சம் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக வாட்ஸ்அப் ப்ரோசசர் பகிர்ந்து கொள்ளப்படும் யூடியூப் வீடியோக்களை யூடியூப் ப்ரோசஸர் அல்லது பிரவுசர்களில் சென்று பார்க்கும் வசதி வழங்கப்பட்டது. தற்போது ஐபோன் வாடிக்கையாளர்கள் வாட்ஸ்அப் சாட் ஸ்கிரீனில் இருந்தபடியே யூடியூப் வீடியோக்களை பார்க்க முடியும்