இன்ஸ்டாகிராம் புதிய அப்டேட் பத்தி நீங்களும் தெரிஞ்சிக்கோங்க

Updated on 18-Jun-2018
HIGHLIGHTS

இன்ஸ்டாகிராம் ஆப் இந்த ஆண்டு பிப்ரவரி மாத ஸ்டோரீக்கள் ஸ்கிரீன்ஷாட் எடுக்கப்பட்டால் பயனர்களுக்கு தெரியப்படுத்தும் அம்சம் டெஸ்ட் செய்யப்படுவதாக தகவல் வெளியானது.

இன்ஸ்டாகிராம் ஆப் இந்த ஆண்டு பிப்ரவரி மாத ஸ்டோரீக்கள் ஸ்கிரீன்ஷாட் எடுக்கப்பட்டால் பயனர்களுக்கு தெரியப்படுத்தும் அம்சம் டெஸ்ட் செய்யப்படுவதாக தகவல் வெளியானது.

இந்த தகவல் குறித்து எவ்வித தகவலும் வழங்கப்படாத நிலையில், ஃபேஸ்புக்கின் இன்ஸ்டாகிராம் ஆப் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டிருக்கும் அறிக்கையில், இந்த அம்சத்திற்கான சோதனை நிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இனி ஸ்டோரீக்களை யாரேனும் ஸ்கிரீன்ஷாட் எடுத்தால், இதுகுறித்த தகவல் வழங்கப்படாது.

இதுகுறித்து பஸ்ஃபீட் வெளியிட்டிருக்கும் தகவல்களில் இன்ஸ்டாகிராம் சார்பில் வெளியிடப்பட்டு இருக்கும் அறிக்கையில், இந்த அம்சத்திற்கான சோதனை நிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் தற்பொழுது ஸ்னாப்சாட் வழங்குவதை போன்று இன்ஸ்டாகிராம் ஸ்டோரீக்களில் ஸ்கிரீன்ஷாட் எடுப்பது குறித்து நோட்டிஃபிகேஷன் வழங்கப்படாது.

முன்னதாக சோதனை காலத்தில் ஸ்கிரீன்ஷாட் எடுக்கப்பட்டால், புஷ் நோட்டிஃபிகேஷன்கள் அனுப்பப்படாமல், சிறப்பு குறியீடு மூலம் பயனர்களுக்கு தெரியப்படுத்தப்படும் என கூறப்பட்டது. இது ஸ்னாப்சாட் சேவைக்கு முற்றிலும் முரணாக இருக்கிறது, ஸ்னாப் நிறுவன சேவையில் ஒவ்வொரு முறை ஸ்கிரீஷாட் எடுக்கப்படும் போதும் பயனருக்கு நோட்டிஃபிகேஷன் மூலம் தகவல் அனுப்பப்படும்.

இன்ஸ்டாகிராம் செயலியின் டைரக்ட் மெசேஜ் (Direct Message) சேவையில் பயனர்கள் ஸ்கிரீன்ஷாட் எடுத்தால், பயனர்களுக்கு நோட்டிஃபிகேஷன் அனுப்பப்படுகிறது குறிப்பிடத்தக்கது. 

சமீபத்தில் இன்ஸ்டாகிராம் செயலியின் ஸ்டோரீக்களில் இருந்தே நேரடியாக ஷாப்பிங் செய்யும் வசதி சேர்க்கப்பட்டது. இதனால் இன்ஸ்டாகிராம் ஸ்டோரீக்களில் தெரியும் சிறிய ஷாப்பிங் பேக் ஐகானை க்ளிக் செய்தே குறிப்பிட்ட பொருளின் முழு விவரங்களை அறிந்து கொண்டு ஷாப்பிங் செய்ய முடியும்.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :