தற்பொழுது டிக்டாக் செயலி மக்கள் மத்தியில் பல மடங்கு பாப்புலராக இருப்பது நமக்கு தெரிந்ததே, எத்தனை தடை வந்த பிறகு இன்னும் அதன் கெத்து காட்டி கொண்டு தான் வருகிறது.அதனை தொடர்ந்து இப்பொழுது அதனை தொடர்ந்து இன்ஸ்டாகிராம் நிறுவனம் டிக்டாக் செயலிக்கு போட்டியயாக இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் என்ற பெயரில் புதிய அம்சத்தை சோதனை செய்ய துவங்கியுள்ளது.
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் அம்சம் கொண்டு வாடிக்கையாளர்கள் 15 நொடிகளுக்கு வீடியோக்களை உருவாக்கி, அவற்றில் இசையை சேர்த்து ஸ்டோரிக்களில் பகிர முடியும். இதை கொண்டு எக்ஸ்ப்ளோர் பகுதியில் உள்ள டாப் ரீல்ஸ் அம்சத்தில் வைரலாக முடியும் என கூறப்படுகிறது.
முதற்கட்டமாக இந்த அம்சம் பிரேசில் நாட்டில் சோதனை செய்யப்படுகிறது. இன்ஸ்டாகிராமின் ஐ.ஒ.எஸ். மற்றும் ஆண்ட்ராய்டு பதிப்புகளில் புதிய அம்சத்திற்கான சோதனை நடைபெறுகிறது. டிக்டாக் செயலி அதிக பிரபலமாகாத நாடுகளில் இந்த அம்சம் சோதனை செய்யப்படுகிறது.
பிரேசில் நாட்டில் இன்ஸ்டாகிராம் செயலியை பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகம் என்பதால், இந்த அம்சம் முதற்கட்டமாக அங்கு சோதனை செய்யப்படுகிறது. உலகளவில் வெளியிடும் முன் இந்த அம்சத்தை அதிகளவு மேம்படுத்தும் பணிகளில் இன்ஸ்டாகிராம் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.
ரீல்ஸ் உருவாக்குவதற்கான ஆடியோவினை வாடிக்கையாளர்கள் ஹேஷ்டேக் சர்ச், எக்ஸ்புளோர் அல்லது டிரெண்டிங் பகுதிகளில் இருந்து எடுத்துக் கொள்ள முடியும். ரீல்ஸ் அம்சத்திற்கென ஃபேஸ்புக் மியூசிக் லைப்ரரி சேவை வழங்கப்படுகிறது.
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் அம்சம் இன்ஸ்டாகிராம் ஸ்டோரிஸ் பகுதியின் ஷட்டர் மோட் டிரேவில் பூமராங் மற்றும் சூப்பர் சூம் அம்சங்களுக்கு அடுத்த இடத்தில் காணப்படுகிறது. வாடிக்கையாளர்கள் வீடியோக்களை ஆடியோ இன்றி பதிவு செய்து அதில் வேறொரு ஆடியோவை சேர்க்க முடியும்.
வாடிக்கையாளர்கள் விரும்பும் பாடல்களை தேடியோ அல்லது அவற்றை பதிவு செய்தோ பல்வேறு வீடியோக்களை ரீல்களில் சேர்த்து கொள்ளலாம். வீடியோவிற்கான மியூசிக் சேர்க்கப்பட்டதும், அதனை எடிட் செய்ய பல்வேறு அம்சங்கள் வழங்கப்படுகிறது. எடிட் செய்து முடித்ததும், வாடிக்கையாளர்கள் தங்களின் ரீலினை ஸ்டோரிஸ், நண்பர்கள் அல்லது விரும்புவோருக்கு மெசேஜ் வடிவில் அனுப்ப முடியும்