இன்ஸ்டாகிராமில் வருகிறது Quiet Mode அம்சம், சூப்பர் தான்.
இன்ஸ்டாகிராம் பயனர்களின் கவனம் மற்றும் நேர நிர்வாகத்தை மேம்படுத்த Quiet Mode என்ற புதிய அம்சத்தை அறிவித்துள்ளது
சமீபத்தில் இன்ஸ்டாகிராம் அதன் மேடையில் உள்ளடக்க ஷெட்யூல் டூல் உட்பட பல அம்சங்களை வெளியிட்டுள்ளது.
மெட்டாவுக்குச் சொந்தமான புகைப்பட-வீடியோ பகிர்வு தளமான இன்ஸ்டாகிராம் பயனர்களின் கவனம் மற்றும் நேர நிர்வாகத்தை மேம்படுத்த Quiet Mode என்ற புதிய அம்சத்தை அறிவித்துள்ளது. இந்த அம்சங்கள் பயனர்கள் தங்கள் நண்பர்கள் மற்றும் பின்தொடர்பவர்களுடன் கவனம் செலுத்தவும் லிமிட்களை உருவாக்கவும் ஊக்குவிக்கும். சமீபத்தில் இன்ஸ்டாகிராம் அதன் மேடையில் உள்ளடக்க ஷெட்யூல் டூல் உட்பட பல அம்சங்களை வெளியிட்டுள்ளது.
புதிய இன்ஸ்டாகிராம் அம்சம் தற்போது அமெரிக்கா, பிரிட்டன், ஐயர்லாந்து, கனடா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து என உலகின் சில நாடுகளில் மட்டும் முதற்கட்டமாக வழங்கப்படுகிறது. இந்தியா உள்பட மற்ற நாடுகளில் விரைவில் வழங்கப்பட இருக்கிறது. இந்த அம்சம் இளைஞர்கள் கோரிக்கையை அடுத்து வழங்கப்பட்டுள்ளது.
இந்த Quiet Mode மோட் பயனர்கள் கஸ்டமைஸ் செய்ய முடியும். ஷெட்யுல் செய்ததும், இந்த அம்சம் நோட்டிஃபிகேஷன்களை விரைவாக காண்பிக்கிறது. அனைவரும் Quiet Mode அம்சத்தை பயன்படுத்தலாம், எனினும், இளைஞர்கள் இதனை பயன்படுத்த பரிந்துரை வழங்குவோம் என இன்ஸ்டாகிராம் தெரிவித்து இருக்கிறது.
இதுதவிர இன்ஸ்டாகிராம் செயலியில் பேரண்டல் சூப்பர்விஷன் டூல்கள் அப்டேட் செய்யப்பட்டுள்ளன. இவை பயனர்கள் தளத்தில் பார்க்கும் தரவுகளை அதிகளவில் கண்ட்ரோல் செய்ய உதவும். பரிந்துரைகளில் துவங்கி, பயனர்கள் இனி தங்களுக்கு விருப்பமில்லாத தரவுகளை மறைத்து வைக்க செய்யலாம். இந்த வசதி explore feed மட்டுமின்றி ரீல்ஸ், சர்ச் உள்ளிட்டவைகளிலும் இயங்குகிறது.
பரிந்துரைக்கப்படும் பதிவுகளின் கமெண்ட்ஸ் மற்றும் டைரக்ட் மெசேஜ்களில் குறிப்பிட்ட வார்த்தைகளை மறைக்கும் வசதியும் வழங்கப்பட்டு இருக்கிறது. இதற்கான வசதியை பிரைவசி செட்டிங்ஸ்-இல் உள்ள Hidden Words பகுதியில் இயக்க முடியும்.
கன்டென்ட் ஷெட்யூல் டூல்
இன்ஸ்டாகிராம் சமீபத்தில் வணிக கணக்குகளுக்கான கன்டென்ட் ஷெட்யூல் டூலை வெளியிட்டது. ஷெட்யூல் டூலை பயன்படுத்தி ரீல்கள், புகைப்பட-வீடியோ மற்றும் கொணர்வி போஸ்ட்களை 75 நாட்கள் வரை திட்டமிடலாம். பயனர்கள் மேம்பட்ட அமைப்புகளுக்குள் திட்டமிடல் கருவியின் விருப்பத்தைப் பெறுவார்கள், அதன் உதவியுடன் போஸ்ட்களை ஷெட்யூல் செய்யலாம்.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile