புதிய டேட்டா சேவர் அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது இன்ஸ்டாகிராம்
ஃபேஸ்புக்கின் இன்ஸ்டாகிராம் செயலியில் புதிய அம்சங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. சமீபத்தில் மேம்பட்ட கேமரா யு.ஐ., புதிய ஸ்டிக்கர்கள், ஸ்டோரிக்களில் ஷாப்பிங் செய்யும் வசதி மற்றும் பல அம்சங்களை கொண்டு வந்தது.
அந்த வரிசையில் தற்பொழுது புதிதாக டேட்டா சேவர் அம்சம் ஒன்றை இன்ஸ்டாகிராம் தனது பயனர்களுக்கு அறிமுகம் செய்துள்ளது. முதற்கட்டமாக இந்த அம்சம் இன்ஸ்டாகிராம் ஆண்ட்ராய்டு தளத்தில் மட்டும் வழங்கப்படுகிறது
இன்ஸ்டாகிராமின் புதிய டேட்டா சேவர் அம்சம் பயனர் செலக்ட் செய்யும் வரை புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பிரீ-லோடு மற்றும் டவுன்லோடு செய்யாது. பயனர் க்ளிக் செய்த பின் மட்டுமே அதிக ரெசல்யூஷன் கொண்ட வீடியோக்களை இன்ஸ்டாகிராம் டவுன்லோடு செய்யும்.
புதிய டேட்டா சேவர் அம்சத்தை இயக்க இன்ஸ்டாகிராம் செயலியின் செட்டிங்ஸ் — அக்கவுண்ட் — மொபைல் டேட்டா யூஸ் — நெவர், வைபை ஒன்லி, செல்லுலார் + வைபை உள்ளிட்ட ஆப்ஷன்களில் நீங்கள் விரும்புவதை தேர்வு செய்யலாம்.
இதன் மூலம் பயனர்கள் பார்க்க விரும்பும் மீடியாக்களை அவர்களே தேர்வு செய்யும் வசதியை அவர்களுக்கு வழங்குகிறது. இவ்வாறு செய்யும் போது பயனர் டேட்டாவும் சேமிக்கப்படுகிறது. இதுதவிர இந்த அம்சத்தை ஆன் செய்ததும், மீடியா எதுவும் டவுன்லோடு ஆகாது என்பதால் புகைப்படங்கள் வேகமாக லோடு ஆகும்.
இன்டர்நெட் வேகம் குறைவாக இருக்கும் நாடுகளை குறிவைத்து புதிய அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய அம்சம் சர்வதேச அளவில் இன்ஸ்டாகிராம் வழங்க துவங்கி இருக்கும் நிலையில், வரும் நாட்களில் இந்த அம்சம் அனைவருக்கும் கிடைக்கும் என தெரிகிறது.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile