இன்ஸ்டாகிராமில் இனி எவ்வளவு லைக் பார்க்க முடியாது.

இன்ஸ்டாகிராமில்  இனி  எவ்வளவு  லைக் பார்க்க முடியாது.
HIGHLIGHTS

ஒரு நபர் பதிவிடும் வீடியோ அல்லது புகைப்படத்திற்கு எவ்வளவு லைக் உள்ளது, எவ்வளவு நபர்கள் பார்த்துள்ளார்கள் என்ற விவரங்களை இரண்டாம் நபர் யாருக்கும் தெரியாது.

சோசியல் வலைத்தளமான இன்ஸ்டாகிராம் பேஸ்புக், ட்விட்டரில்  போல மிகவும் பாப்புலராக இருப்பதில் ஒன்றாக இருக்கும் மற்றும்  மற்ற சோசியல் மீடியா வெப்சைட்  போலவே போட்டோ  வீடியோ போன்றவற்றை இங்கே ஷேர் செய்ய முடியும் அது மட்டுமல்லாமல் அந்த போஸ்ட் பிடித்திருந்த லைக் கமன்ட் போன்றவற்றை இங்கே செய்ய முடியும். ஒரு சிலர்  அதிக லைக் கிடைப்பது அல்லது குறைவான லைக் இருப்பதை  நீங்கள் எளிதாக  பார்க்க முடியும், மேலும் ஒரு சிலர் குறைந்தன லைக்  கிடைப்பதால்  மன அழுத்தத்துக்கு  உள்ளாகுகிறார்கள் 

அதாவது ஒரு நபர் பதிவிடும் வீடியோ அல்லது புகைப்படத்திற்கு எவ்வளவு லைக் உள்ளது, எவ்வளவு நபர்கள் பார்த்துள்ளார்கள் என்ற விவரங்களை இரண்டாம் நபர் யாருக்கும் தெரியாது.

சோசியல் மீடியா தளங்களில் ஒரு படம் அல்லது வீடியோவை பதிவேற்றிய பிறகு அதற்கு எவ்வளவு லைக் வந்தது, என்ன கமெண்ட் வந்தது என்ற போட்டிகள் வருகிறது. அதனால் சோசியல் மீடியா  பயனர்கள் பணம் கொடுத்து லைக்குகளைப் பெறும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். சிலர் தீவிர மன சோர்வுக்கு ஆளாகின்றனர்.

இவற்றைக் குறைக்கவே இன்ஸ்டாகிராம் இந்த முடிவை எடுத்துள்ளாத கூறியுள்ளது. முதலாவதாக இந்த லைக் ஆப்ஷனை மறைக்கும் முடிவை இன்ஸ்டாகிராம் கனடாவில் சோதனை செய்திருந்தது. தற்போது ஆஸ்திரேலியா, பிரேசில், ஐர்லாந்து, இத்தாலி, ஜப்பான் மற்றும் நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளும் அதில் இணைந்துள்ளன. தொடர்ந்து பிற நாடுகளிலும் இது அமல்படுத்தப்படும் என்று இன்ஸ்டாகிராமில் இருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

இது ஒரு சோதனை முயற்சி, இதன் மூலம் தங்களது பயனர்களின் அனுபவத்தை ஆய்வு செய்து வருகிறோம் என்று இன்ஸ்டாகிராம் தெரிவித்துள்ளது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo