இன்ஸ்டாகிராமில் எதிர் பார்த்து காத்து கொண்டிருந்த டார்க் மோட் வசதி அறிமுகம்.

Updated on 09-Oct-2019

இன்ஸ்டாகிராம் செயலியில் படிப்படியாக டார்க் மோட் வசதி வழங்கப்படுகிறது. ஆண்ட்ராய்டு மற்றும்  ஐ.ஒ.எஸ். என இருவித தளங்களிலும் புதிய வசதிக்கான அப்டேட் வழங்கப்படுகிறது.

முன்னதாக கூகுள் நிறுவனம் தனது ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தில் டார்க் மோட் வசதியை வழங்கியது. இதில் பெரும்பாலான கூகுள் செயலிகள் புதிய டார்க் மோட் பெறும் என கூகுள் தெரிவித்திருந்தது. எனினும், பெரும்பாலான மூன்றாம் தரப்பு செயலிகளில் டார்க் மோட் வசதி விரைவில் வழங்கப்பட இருக்கிறது.

IOS 13 மற்றும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம் கொண்ட சாதனங்களில் டார்க் மோட் ஆன் செய்ததும் இன்ஸ்டாகிராமிலும் அது தானாக வேலை செய்யும். எனினும் ஆண்ட்ராய்டு போனில் டார்க் மோட் வேலை செய்தாலே இன்ஸ்டாகிராமிலும் டார்க் மோட் இயங்கும்

அந்த வரிசையில் தற்சமயம் இன்ஸ்டாகிராம் இணைந்திருக்கிறது. இன்ஸ்டாகிராம் செயலியின் டார்க் மோட் AMOLED சார்ந்து இயங்குகிறது. இதன் பேக்ரவுண்ட்  கருப்பு நிறம் இருக்கும். இது பெரும்பாலான செயலிகளில் சீராக இயங்கும். வரும் அப்டேட்களில் இந்த அம்சம் மேலும் மேம்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :