இன்ஸ்டாகிராம் செயலியில் அடிக்கடி ஸ்டோரி பதிவிடுவோர் இனி, அவற்றின் பின்னணியில் இசையை சேர்க்க முடியும். இன்ஸ்டா அதிகாரப்பூர்வ வெப்சைட்டில் இந்த வசதியை தெரிவித்து இருக்கிறது. புதிய அம்சம் மூலம் ஸ்டோரிக்களில் சரியான பின்னணி இசையை சேர்த்து, இதுவரை இல்லாத வகையில் கூடுதல் பயனர்களை கவர முடியும்.
முன்னதாக இன்ஸ்டா ஸ்டோரிக்களில் இசையை சேர்க்க மொபைலில் உள்ள பாடல்களை ஒலிக்க செய்ய வேண்டிய நிலை இருந்தது. இனி பயனர்கள் மிக எளிமையாக தங்களுக்கு விருப்பமான இசையை ஸ்டோரியில் சேர்த்துக் கொள்ள முடியும். ஸ்டோரியில் ஸ்டிக்கர், போட்டோ அல்லது வீடியோவை சேர்க்க கோரும் ஐகானை அடுத்த இடத்தில் மியூசிக் ஐகான் காணப்படுகிறது.
paytm இந்த எலக்ட்ரோனிக் வழங்குகிறது அதிரடி டீல்ஸ் பற்றி தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யுங்கள்
இன்ஸ்டாவில் உள்ள புதிய மியூசிக் ஐகானை க்ளிக் செய்தால் ஆயிரக்கணக்கான பாடல்கள் அடங்கிய லைப்ரரி திறக்கும். இங்கு உங்களுக்கு விருப்பமான பாடல், மனநிலைக்கு ஏற்றதை பிரவுஸ் செய்தோ அல்லது இன்ஸ்டா சார்பில் பரிந்துரைக்கப்படும் பிரபல இசை உள்ளிட்டவற்றை தேர்வு செய்து கொள்ள முடியும்.
விரும்பிய பாடல் அல்லது இசையை தேர்வு செய்ததும் அவற்றை ஃபாஸ்ட் ஃபார்வேர்டு அல்லது ரீவைன்ட் செய்து, உங்களின் ஸ்டோரிக்கு ஏற்றவாரு அதனை செட் செய்து கொள்ள முடியும். மேலும் ஸ்டோரியில் இசையை சேர்த்தபின் அதனை நேரடியாக போஸ்ட் செய்யும் முன் பிரீவியூ செய்ய முடியும்.
இன்ஸ்டாவில் வீடியோவை பதிவு செய்யும் முன் பாடல் அல்லது இசையை தேர்வு செய்து அவற்றை க்ராப் செய்யவும் முடியும். எனினும் இந்த வசதி தற்சமயம் ஐஓஎஸ் பயனர்களுக்கு மட்டும் வழங்கப்படுகிறது. உங்களது ஸ்டோரியை பார்க்கும் நண்பர்கள் மற்றும் உறவினர்களால் புகைப்படம் அல்லது வீடியோவில் உள்ள இசையை கேட்க முடியும். இத்துடன் பாடலின் தலைப்பு மற்றும் பெயரை குறிப்பிடும் ஸ்டிக்கரும் தெரியும்.
ஏற்கனவே இன்ஸ்டாகிராம் ஆயிரக்கணக்கான இசையை வழங்கியுள்ள நிலையில், தினமும் புதிய பாடல்களை சேர்க்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐஓஎஸ் மற்றும் ஆன்ட்ராய்டு தளங்களில் தற்சமயம் மியூசிக் ஸ்டிக்கர் 51 நாடுகளில் கிடைக்கிறது. தினசரி அடிப்படையில் சுமார் 40 கோடிக்கும் அதிகமானோர் பயன்படுத்தி வருகின்றனர்.
paytm இந்த எலக்ட்ரோனிக் வழங்குகிறது அதிரடி டீல்ஸ் பற்றி தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யுங்கள்