இன்ஸ்டாகிராம் ஆப்யில்புதிதாக இரண்டு அம்சம்ங்களை வழங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. புதிய இரண்டடுக்கு ஆத்தென்டிகேஷன் மற்றும் பொது அக்கவுன்ட்கள் அவர்களின் ஃபாளோவர்களை நீக்கும் அம்சம் டெஸ்ட் செய்யப்படுகிறது.
நீண்ட காலமாக பிரைவட் அக்கவுன்ட் வைத்திருப்போருக்கு வழங்கப்பட்டிருந்த நிலையில், பப்ளிக் அக்கவுன்ட் பயன்படுத்துவோருக்கு இந்த அம்சம் வழங்கப்பட இருக்கிறது. தற்சமயம் இந்த அம்சம் டெஸ்ட் செய்யப்படுவதால், ஆன்ட்ராய்டு பயனர்களுக்கு படிப்படியாக வழங்கப்படுகிறது.
புதிய அம்சம் சோதனை செய்யப்படுவதை இன்ஸ்டாகிராம் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்திருக்கிறது, எனினும் இதன் முழுமையான வெளியீடு குறித்து எவ்வித தகவலையும் வழங்கவில்லை. மேலும் ஃபாளோவர்களை நீக்கும் போது அவர்களுக்கு எவ்வித நோட்டிஃபிகேஷனும் அனுப்பப்படாது என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
முன்னதாக மே மாதத்தில் இன்ஸ்டாகிராம் செயலியில் மியூட் அம்சம் அறிமுகம் செய்யப்பட்டது. இதை கொண்டு ஒருவரை பின்தொடரும் போது அவர்களது போஸ்ட் மற்றும் ஸ்டோரிக்களை முழுமையாக தவிர்க்க முடியும். புதிய அம்சம் மூலம் இன்ஸ்டாகிராமில் உங்களை பின்தொடர்வோரை முழுமையாக இயக்க முடியும்.
இந்த அம்சம் உங்களுக்கு வழங்கப்பட்டு இருப்பதை தெரிந்து கொள்ள, உங்களது ஃபாளோவர்களை க்ளிக் செய்ய வேண்டும். இனி செங்குத்தாக இருக்கும் மூன்று புள்ளிகள் கொண்ட பட்டனை க்ளிக் செய்தால், குறிப்பிட்ட நபரை நீக்குவதற்கான அம்சம் இடம்பெற்றிருக்கும்.