இனி வாட்ஸ்அப்பில் பேசினால் மட்டும் போதும் டைப் செய்ய தேவை இல்லை..!
பேசுவதை எழுத்துகளாக சைப் செய்து வழங்கும் நுட்பம் எப்போதோ கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது. அதுபோன்ற பயன்பாடு வாட்ஸ்அப்பில் வராதா? என்பது பலரது எதிர்பார்ப்பாக இருந்து வந்தது.
வாட்ஸ்அப்பில் டைப் செய்து மெசேஜ் அனுப்புவது பலருக்கு சிரமமான விஷயமாக இருக்கிறது. டைப் செய்வதால் அதிக நேரம் பிடிப்பதுடன், பிழைகள் ஏற்படவும் வாய்ப்பு உண்டு என்பதால் பலரும் மைக் மூலம் குரலை பதிவு செய்து வாய்ஸ் மெசேஜாக அனுப்புவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
பேசுவதை எழுத்துகளாக சைப் செய்து வழங்கும் நுட்பம் எப்போதோ கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது. அதுபோன்ற பயன்பாடு வாட்ஸ்அப்பில் வராதா? என்பது பலரது எதிர்பார்ப்பாக இருந்து வந்தது.
இந்நிலையில், கூகுளின் ஜி-போர்டு ‘கீபோர்டு’ அப்ளிகேசனை பயன்படுத்தி பயனர் தங்களது பேச்சை டைப் செய்துவிட முடியும். இதுவரை வாட்ஸ்அப்பில் அந்த வசதி அறிமுகம் செய்யப்படாவில்லை என்றாலும், ஜிபோர்டு வசதியைப் பயன்படுத்தி வாட்ஸ்அப் செயலிலும் மெசேஜ் டைப் செய்யலாம்.
இதை செயல்படுத்த வாட்ஸ்அப் ஆப்யின் புதிய பதிப்புக்கு உங்களது ஆப் அப்டேட் செய்து கொள்ள வேண்டும். மேலும் ஜிபோர்டு செயலியை கூகுள் பிளே ஸ்டோர் அல்லது ஆப்பிள் ஆப் ஸ்டோரில் இருந்து டவுன்லோடு செய்து கொள்ள வேண்டும்.
பின் டைப் செய்யும்போது வழக்கமான வாட்ஸ்அப் மைக் அருகே ஜிபோர்டின் மைக் பாஸ்வர்ட் தோன்றும். அதை அழுத்திவிட்டு பேசினால், அது நமது பேச்சை எழுத்துகளாக டைப் செய்துவிடும். இந்த வகையில் பாஸ்வேர்டு மற்றும் சில ரகசிய குறிகளை மட்டும் டைப் செய்ய முடியாது. இந்த வசதியை வாட்ஸ்அப் ஆப்யில் சேர்ப்பது பற்றி இதுவரை எந்த அறிவிப்பும் வரவில்லை.
மெசேஜ்களை எழுத்துக்களாக டைப் செய்யும் வேலையே ஜிபோர்டு பார்த்துக் கொள்ளும் என்றாலும், மெசேஜை அனுப்பும் முன் பிழை இல்லாததை உறுதி செய்துகொள்ள வேண்டும். மேலும் இத்தகைய சிறப்பம்சத்தின் மூலம் மக்கள் நன்மை பெறுவார்கள் என்று வாட்ஸ்அப் கூறுகிறது.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile