Email லிருந்து WhatsApp இயக்கலாம் எப்படி லிங்க் செய்வது பார்க்கலாம் வாங்க

Updated on 24-Nov-2023
HIGHLIGHTS

WhatsApp நிறுவனம் புதிய அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது

இந்த அப்டேட் தற்போது iOS பயனர்களுக்கு உள்ளது

உண்மையில் WhatsApp ஈமெயில் வெரிபிகேசன் அம்சத்தை அறிமுகப்படுத்துகிறது.

WhatsApp நிறுவனம் புதிய அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அப்டேட் தற்போது iOS பயனர்களுக்கு உள்ளது, இது விரைவில் Android பயனர்களுக்கு கிடைக்கும். இதைச் செய்ய, உங்கள் ஈமெயில் வாட்ஸ்அப்புடன் இணைக்க வேண்டும். உண்மையில் WhatsApp ஈமெயில் வெரிபிகேசன் அம்சத்தை அறிமுகப்படுத்துகிறது. இதில் வாட்ஸ்அப் அக்கவுண்ட் ஈமெயில் மூலம் சரிபார்க்கலாம். முன்னதாக, இந்த வசதி மொபைல் நம்பரில் மட்டுமே இருந்தது, அதில் அக்கவுன்ட் மெசேஜ் மூலம் சரிபார்க்கப்பட்டது.

ஏன் இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டது

உண்மையில், இந்தியாவில் மொபைல் நெட்வொர்க் கவரேஜ் நன்றாக இல்லாத சில பகுதிகள் உள்ளன. இத்தகைய சூழ்நிலையில், வாட்ஸ்அப் மூலம் ஈமெயில் வெரிபை செயல்முறை தொடங்கப்பட்டுள்ளது. இதில், வைஃபை அல்லது பிராட்பேண்ட் இணைப்பைப் பயன்படுத்தி ஈமெயில் மூலம் அக்கவுண்டை சரிபார்க்கலாம். இந்த அம்சம் உலகளவில் வெளியிடப்பட்டுள்ளது. இதனுடன், ஆண்ட்ராய்டு பீட்டா அப்டேட்டிர்க்கான வாட்ஸ்அப் மூலம் AI சாட்பாட் ஒருங்கிணைப்பு வசதி தொடங்கப்பட்டுள்ளது.

ஈமெயில் உடன் WhatsApp எப்படி லிங்க் செய்வது?

  • WhatsApp பயனர்கள் எளிதாக ஈமெயில்கலை இணைக்க முடியும்.
  • இதற்கு முதலில் வாட்ஸ்அப் அக்கவுன்ட் செட்டிங்ஸ் ஆப்ஷனுக்கு செல்ல வேண்டும்.
  • இதற்குப் பிறகு நீங்கள் அக்கவுன்ட் விருப்பத்தைப் பார்வையிட வேண்டும்.
  • பிறகு Email Addressஆப்சனுக்கு செல்ல வேண்டும்.
  • இதற்குப் பிறகு 6 டிஜிட் கோடை பெறுவதற்கான விருப்பத்தை இயக்க வேண்டும்.

குறிப்பு – இந்த அம்சம் இன்னும் கிடைக்கவில்லை என்றால், வரும் வாரங்களில் அனைத்து பயனர்களுக்கும் இது வெளியிடப்படலாம். தற்போது இந்த அம்சம் iOS பயனர்களுக்கானது. அத்தகைய சூழ்நிலையில், ஆண்ட்ராய்டு பயனர்கள் சிறிது காத்திருக்க வேண்டும்.

இதையும் படிங்க:: BSNL அறிமுகம் செய்தது WhatsApp சாட்போட் அனைத்து வேலைகளும் ஒரு நொடியில் முடியும்

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :