Happy Diwali 2024:உங்களின் அன்பானவர்களுக்கு whatsapp யில் எப்படி வாழ்த்து சொல்வது?

Updated on 31-Oct-2024

Happy Diwali 2024:: தீபஒளியின் திருவிழா தீபாவளி திருநாளாக கொண்டாடப்படுகிறது, உங்கள் அன்புக்குரியவர்களுக்கு இந்த வாழ்த்துகள், வாட்ஸ்அப் மெசேஜ்கள், GIFs மற்றும் போட்டோ மூலம் அந்த நாளை சிறப்பாகவும் மறக்கமுடியாததாகவும் மாற்ற வாழ்த்துகள் தெரிவிக்கும் நேரம் இது. த்ரிக் பஞ்சாங்கத்தின்படி, இந்த ஆண்டு அக்டோபர் 31 ஆம் தேதி ஆன இன்று தீபத் திருவிழா கொண்டாடப்படுகிறது.

தீபாவளி என்றால் , தீமையின் மீது நன்மையின் வெற்றியையும், இருளின் மீது ஒளியையும், விரக்தியின் மீது மகிழ்ச்சியையும் குறிக்கிறது. 14 வருட வனவாசத்தை முடித்துக் கொண்டு சீதை மற்றும் லட்சுமணனுடன் ராமர் அயோத்திக்கு திரும்பியதைக் குறிக்கும் வகையில் கொண்டாடப்படும் ஒரு முக்கிய இந்து பண்டிகை இது. இந்து புராணங்களின்படி, அயோத்தி மக்கள் இந்த நிகழ்வைக் கொண்டாட ஆயிரக்கணக்கான தீபங்களை ஏற்றினர். எனவே, இன்றுவரை அந்த பாரம்பரியம் தொடர்கிறது. அது போல இந்த தீபாவளிக்கு உங்கள் அன்பானவர்களுக்கு குடும்பம் மற்றும் நன்ம்பர்களுக்கு WhatsApp Gif,ஸ்டிக்கர் மற்று வாழ்த்து மெசேஜ் அனுப்பலாம் இதை தவிர வித விதமாக ஸ்டேட்டஸ் வைக்கலாம்.

இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.

  • உங்கள் வாழ்க்கையில் ஒவ்வொரு தருணமும் வெற்றி, ஆரோக்கியம், மகிழ்ச்சி நிரம்பியதாக மலரட்டும். இந்த தீபாவளி பண்டிகை உங்கள் வாழ்வில் புதுமையான ஒளிகளால் நிரம்பி மகிழ்ச்சி கொண்டாடுவதை உறுதியாக்கட்டும். இனிய தீபாவளி வாழ்த்துகள்!
  • உங்கள் வாழ்க்கை எப்போதும் விளக்குகளால் ஒளிரட்டும், ஒவ்வொரு நாளும் நம் உள்ளத்தில் சந்தோஷம் மலரட்டும். தீபாவளியின் மகிழ்ச்சி உங்கள் வாழ்க்கையில் புது வண்ணங்கள் சேர்க்கட்டும்.
  • இந்த தீபாவளி உன் வாழ்வில் ஒளியுடன் மகிழ்ச்சியையும் வெற்றியும் கொண்டு வரட்டும். ஒவ்வொரு நாளும் உன் வாழ்க்கையில் ஒளி கிடைத்திட வாழ்த்துகிறேன்.
  • இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்! உங்கள் வாழ்வு எப்போதும் ஒளியுடனும் சந்தோஷத்துடனும் நிறைந்து வாழ வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்.
  • தீபாவளி வாழ்த்துகள்! உன் வாழ்வின் ஒவ்வொரு தருணமும் மகிழ்ச்சியாகவும் சந்தோஷமாகவும் இருப்பதாக இறைவனை வேண்டுகிறேன்.
  • இந்த தீபாவளியை கொண்டாடுவோம்! இதயத்தில் ஒளியின் தாரகை எங்கள் நட்பை பலப்படுத்தட்டும். இனிய தீபாவளி!
  • ஒவ்வொரு தீபாவளியும் எங்கள் குடும்பத்தில் நிறைந்த மகிழ்ச்சியுடனும், எளிமையுடனும் கொண்டாடுவோம். ஒளியுடனும் மகிழ்ச்சியுடனும் விளக்குகளை ஏற்றுமாறு வாழ்த்துக்கள்!

WhatsApp யில் தீபாவளி ஸ்டிக்கர் எப்படி டவுன்லோட் செய்வது?

  • WhatsApp சேட் திறக்கவும்.
  • இமொஜி ஐகான் தட்டவும்.
  • அதன் பிறகு ஸ்டிக்கர் செக்சனுக்கு செல்லவும்.
  • மேலும் ஸ்டிக்கர்களைப் பெறு” என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  • இப்பொழுது ஆப் ஸ்டோர்க்கு சென்று தீபாவளி ஸ்டிக்கர் என சர்ச் செய்யவும்.
  • அதில் உங்களுக்கு பிடித்த ஸ்டிக்கர் பேக் டவுன்லோட் செய்யலாம்.
  • இப்பொழுது நீங்கள் எந்த மாதுரிஎல்லாம் ஸ்டிக்கர் அனுப்ப விரும்புகிறிர்களோ அதை டவுன்லோட் செய்து அனுப்பலாம்.

WhatsApp தீபாவளி Gif எப்படி அனுப்புவது?

  • whatsApp சேட்டை திறந்து இமொஜி ஐகானில் GIF என தட்டவும்.
  • அதில் இப்பொழுது தீபாவளி Gif என்று சர்ச் பாரில் சர்ச் செய்யவும்.
  • இப்பொழுது உங்களுக்கு பிடித்த GIF செலக்ட் செய்து அனுப்பவும்.

தீபாவளி 2024 WhatsApp ஸ்டேட்டஸ் எப்படி வைப்பது?

  • வெப்சைட்டை சர்ச் செய்யுங்கள் : இலவசமாக டவுன்லோட் செய்யக்கூடிய மீடியாவை வழங்கும் வெப்சைட்டை கண்டறிய சர்ச் இஞ்சின் பயன்படுத்தவும். எங்கள் கருத்துப்படி, Pinterest போன்ற வெப்சைட்கள் அல்லது வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் போட்டோக்கள் மற்றும் வீடியோக்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட சிறப்பு தளங்கள் சிறந்ததாக இருக்கும்.
  • தீபாவளி செக்சனை கண்டறியவும்: தீபாவளி டெடிகேட்டட் செக்சன் அல்லது பிரிவைக் கண்டறியவும். இந்த தளங்கள் பொதுவாக சந்தர்ப்பத்தின் அடிப்படையில் கன்டென்ட் ஒழுங்கமைக்கின்றன.
  • போட்டோ அல்லது வீடியோவைத் தேர்ந்தெடுக்கவும்: இங்கே கிடைக்கும் விருப்பங்களைப் பார்த்து, நீங்கள் விரும்பும் போட்டோ அல்லது வீடியோவைத் தேர்ந்தெடுக்கவும்.
  • மீடியா டவுன்லோட் : அந்த பைலை சேமிக்க டவுன்லோட் பட்டனை கிளிக் செய்யவும். அதன் பார்மெட் WhatsApp உடன் இணைக்க உதவும் என்பதை நினைவில் கொள்ளவும்.

இதையும் படிங்க:Dhanteras 2024:வீட்டில் செல்வம் செழிக்க உங்கள் அன்பான உறவினருக்கு WhatsApp யில் வாழ்த்துங்க

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :