இந்திய அரசு முக்கிய நடவடிக்கை எடுக்கும் விதமாக 18 OTT பிளாட்பர்ம்களுக்கு அவற்றுடன் தொடர்புடைய சோசியல் மீடியா அக்கவுண்ட்கள் மூடப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் ஆபாசமான கண்ட்டேன்ட்கள் காட்டப்பட்டது. PTI அறிக்கையின்படி, தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் ஒரு அறிக்கையில், இந்தியாவில் 18 ஓவர் டாப் (OTT) பிளாட்பாரம் 19 வெப்சைட்கள் 10 ஆப்ஸ் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய 57 சோசியல் மீடியா அக்கவுண்ட்கள் முடக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ளது. Google Play Store யில் 7 ஆப்களும் ப்ளாக் செய்யப்பட்டுள்ளது Apple App Store யில் 3 ஆப்களும் உள்ளன.
அறிக்கையின்படி, பல்வேறு அரசு துறைகள்/அமைச்சகங்கள், வல்லுநர்கள் மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகள் உரிமை ஆர்வலர்களுடன் கலந்துரையாடிய பின்னர், OTT தளங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டது. தகவல் தொழில்நுட்ப சட்டம் 2000 இன் விதிகளின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அறிக்கையின்படி, இந்த தளங்களில் காட்டப்படும் உள்ளடக்கத்தின் பெரும்பகுதி ஆபாசமானது மற்றும் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் சித்தரிக்கிறது. அவற்றுள் அநாகரீகம் அதிகமாக இருந்தது. ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையிலான உறவுகள் காட்டப்பட்டன. தவறான குடும்ப உறவுகள் சித்தரிக்கப்பட்டன.
நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள OTT ஆப்களில் ஆப் 1 கோடிக்கும் அதிகமான டவுன்லோட்களை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதேசமயம் கூகுள் பிளே ஸ்டோரில் இரண்டு ஆப்ஸ் 50 லட்சத்துக்கும் அதிகமான முறை டவுன்லோட் செய்யப்பட்டுள்ளது. மக்களைச் சென்றடைவதற்காக, இந்தப் ஆப்கள் பார்வையாளர்களைக் கவரும் வகையில், சோசியல் மீடியா ஆப்களில் இதுபோன்ற காட்சிகளைக் காண்பிக்கும்.
இதையும் படிங்க: BSNL செம்மா மஜாவான நன்மை இந்த 2 திட்டங்களில் கிடைக்கும் Extra Benefit