கூகுள் இனி கொண்டு வரும் ஸ்லெஸ் என்ற சோசியல் மீடியா பளாட்பார்ம்.
கூகுள் நிறுவனம் மீண்டும் சமூக வலைத்தள சேவை ஒன்றை புதிதாக துவங்கியுள்ளது. முன்னதாக கூகுள் பிளஸ் போன்று கூகுளின் சமூக வலைத்தள சேவைகள் எதிர்பார்த்த வரவேற்பை பெறாத நிலையில், தற்சமயம் ஷூலேஸ் என்ற பெயரில் புதிய சேவையை கூகுள் துவங்கி இருக்கிறது.
புதிய சேவையை கொண்டு பயனர்கள் ஒன்றிணைந்து ஏதேனும் நடவடிக்கைகளில் ஈடுபட முடியும். கூகுளின் சோதனை பிரிவான ஏரியா 120 உருவாக்கியிருக்கும் புதிய சமூக வலைத்தளம் முதற்கட்டமாக நியூ யார்க் நகரில் மட்டும் துவங்கப்பட்டுள்ளது.
இது ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் போன்று வலைத்தளத்தில் பயனர்களை ஈர்க்காமல், அவர்களை மற்றவர்களுடன் நேரடியாக சந்திக்க வழி செய்கிறது. சேவையை பயன்படுத்துவோரிடம் செயலி முதற்கட்டமாக அவர்களது விருப்பங்களை கேட்டு அறிந்து கொள்கிறது. பின் அவர்களது விருப்பத்திற்கு ஏற்ப உள்ளூர் நடவடிக்கைகளை பரிந்துரைத்து அவர்களை அதில் கலந்து கொள்ள வழி செய்கிறது.
முதற்கட்டமாக நியூ யார்க் நகரில் மட்டும் துவங்கப்பட்டுள்ள இந்த சேவை அமெரிக்கா முழுக்க விரிவுப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இதற்கான கால அட்டவணை ஏதும் அறிவிக்கப்படவில்லை.
இதுபோன்ற நடவடிக்கைகளை ஷூலேஸ் 'லூப்ஸ்' என அழைக்கிறது. செயலியின் பரிந்துரைகள் மட்டுமின்றி பயனர்களும் சொந்தமாக நடவடிக்கைகளை உருவாக்கி, அதில் மற்றவர்களை கலந்து கொள்ள அழைக்க முடியும். அன்றாட வாழ்வில் புதிய மனிதர்களை சந்திக்க விரும்புவோருக்கு இந்த சேவை ஏற்றதாக இருக்கும்.
ஷூலேஸ் செயலியை பயனர்கள் கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப் ஸ்டோரில் இருந்து டவுன்லோடு செய்து கொள்ளலாம். எனினும், டெஸ்ட் ஃபிளைட் முறையில் தான் இதனை மேற்கொள்ள முடியும்.
புவியியல் கட்டுப்பாடுகளுடன், ஷூலேஸ் செயலியை தற்சமயம் அழைப்பிதழின் பேரில் மட்டுமே பயன்படுத்த முடியும். இதற்கென செயலி தேர்வு செய்யப்பட்ட குழுக்களுடன் இணைந்துள்ளது. இதில் அழைப்பிதழை பெற கூகுள் படிவம் ஒன்றை பூர்த்தி செய்ய வேண்டும்
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile