கூகுள் டிரான்ஸ்லேட் ஆப் யூஸ் பண்ண இன்டர்நெட் இருக்கணும்னு அவசியம் இல்லை இனி ஆஃப்லைனிலும் யூஸ் பண்ணலாம்

கூகுள் டிரான்ஸ்லேட் ஆப்  யூஸ் பண்ண இன்டர்நெட் இருக்கணும்னு அவசியம் இல்லை  இனி ஆஃப்லைனிலும் யூஸ் பண்ணலாம்
HIGHLIGHTS

கூகுள் டிரான்ஸ்லேட் ஆப் நியூரல் மெஷின் லெர்னிங் தொழில்நுட்பம் சார்ந்த ஆஃப்லைன் வசதி சேர்க்கப்பட்டுள்ளது. இந்த தொழில்நுட்பம் சாதனத்தில் மொழிமாற்றம் செய்யும் திறன் கொண்டிருக்கிறது.

புதிய தொழில்நுட்பம் சேர்க்கப்பட்டு இருப்பதால், ஆன்ட்ராய்டு அல்லது ஐஓஎஸ் தளங்களில் கூகுள் டிரான்ஸ்லேட் செயலியால் அதிக தரமுள்ள மொழிமாற்றங்களை இணைய வசதி இல்லாதபோதும் மேற்கொள்ள முடியும்.

செயலியில் சேர்க்கப்பட்டு இருக்கும் நியூரல் சிஸ்டம் ஒவ்வொரு வார்த்தையாக மொழிமாற்றம் செய்யாமல், ஒட்டுமொத்த வாக்கியத்தையும் மொழிமாற்றம் செய்யும் என கூகுள் தெரிவித்துள்ளது. மிகவும் நேர்த்தியான மொழிமாற்றம் செய்ய பல்வேறு அம்சங்களை கணக்கில் கொண்டு, அவற்றில் பொருத்தமானவற்றை, கிட்டத்தட்ட மனித குரலிலேயே வழங்கும். 

 paytm இந்த எலக்ட்ரோனிக் வழங்குகிறது அதிரடி டீல்ஸ் பற்றி தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யுங்கள் 

மொழி தெரியாத, டேட்டா கனெக்டிவிட்டி பெற சிக்கலாக இருக்கும் வெளிநாட்டு பயணங்களின் போது ஆஃப்லைன் டிரான்ஸ்லேஷன் அம்சம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஒவ்வொரு மொழியும் 35 முதல் 45 எம்பி அளவு கொண்டிருப்பதால், மொபைலில் அதிக ஸ்டோரேஜ் எடுத்துக் கொள்ளாது.

ஆன்ட்ராய்டு மற்றும் IOS செயலிகளில் நியூரல் மெஷின் டிரான்ஸ்லேஷன் வசதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முன் ஆஃப்லைன் டிராஸ்லேஷன் அம்சம் பயன்படுத்தியிருந்தால், ஹோம் ஸ்கிரீனிலேயே பேனர் ஒன்று காட்சியளிக்கும், இதை க்ளிக் செய்ததும் உங்களின் ஆஃப்லைன் ஃபைல்களை அப்டேட் செய்யும். 

ஒருவேளை பயன்படுத்தவில்லை எனில் ஆஃப்லைன் டிரான்ஸ்லேஷன் செட்டிங்ஸ் சென்று, ஆஃப்லைனில் பயன்படுத்த வேண்டிய மொழியை டவுன்லோடு செய்யலாம். அடுத்த சில நாட்களில் ஆஃப்லைன் வசதி கூகுள் டிரான்ஸ்லேட் செயலியின் 59 மொழிகளில் சேர்க்கப்படுகிறது.

 paytm இந்த எலக்ட்ரோனிக் வழங்குகிறது அதிரடி டீல்ஸ் பற்றி தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யுங்கள் 

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo