மெசெஜிங் ஆப்யில் ட்ருகாலர் போன்ற மேலும் புதிய வசதியை, வழங்கி அசத்தும் கூகுள்…!
ஆண்ட்ராய்டு பிளாட்பார்மில் மெசேஜிங் ஆப் யின் ஸ்பேம் அம்சத்தை கொண்டு வந்துள்ளது,
ஆண்ட்ராய்டு பிளாட்பார்மில் மெசேஜிங் ஆப் யின் ஸ்பேம் அம்சத்தை கொண்டு வந்துள்ளது, தற்பொழுது இந்த அம்சமானது சில பயனர்களுக்கு மட்டும் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது விரைவில் அனைவரும் வழங்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
புதிய அம்சம் சர்வெர் சார்ந்து வெளியிடப்படுவதால், ஸ்பேம் பாதுகாப்பு வசதி சிலருக்கு மட்டும் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. இது பயனர்களுக்கு நோட்டிஃபிகேஷன் வடிவில் வழங்கப்படுகிறது.
புதிய ஸ்பேம் ப்ரோடெக்ஷன் ஆப்ஷனை ஆக்டிவேட் செய்ய பயனர்கள் செட்டிங்ஸ் — அட்வான்ஸ்டு செட்டிங்ஸ் — ஸ்பேம் ப்ரோடெக்ஷன் — எனேபிள் ஸ்பேம் ப்ரோடெக்ஷன் உள்ளிட்ட ஆப்ஷன்களை செயல்படுத்த வேண்டும். இவ்வாறு செய்ததும் உங்களுக்கு போலி மெசேஜ்கள் வரும் போது இந்த அம்சம் அவற்றை கண்டறிந்து தெரிவிக்கும்.
தனியுரிமை தரப்பில் இந்த அம்சம் எவ்வாறு இயங்கும் என்ற விவரங்கள் கூகுளின் சப்போர்ட் வெப்சைட்டில் பதிவிடப்பட்டு இருந்தது. அதில், இந்த அம்சம் செயல்படுத்தியதும் செயலிக்கு வரும் மெசேஜ்களில் சில விவரங்கள் கூகுளுக்கு அனுப்பப்படும். எனினும் கூகுளுக்கு அனுப்பப்படும் மெசேஜ் படிக்கப்படாது.
இந்த ஆப்ஷன் பின்னணியில் எவ்வாறு இயங்குகிறது என்பது பற்றி தெளிவான விவரங்கள் வெளியிடப்படவில்லை. எனினும், ஸ்பேம் ரிப்போர்ட்டில் குறிப்பிட்ட மெசேஜ் முழுமையாக கூகுளுக்கு அனுப்பப்படுகிறது. இதில் மெசேஜ் அனுப்பியவர் மற்றும் அதனை பெறுபவரின் மொபைல் நம்பர் உள்ளிட்ட விவரங்கள் அடங்கியிருக்கும்.
அனைவருக்கும் வழங்கப்படும் போது இந்த அம்சம் எந்தளவு பயனுள்ளதாக இருக்கும் என்பதை தெளிவாக புரிந்து கொள்ள முடியும். எனினும், நீங்கள் பரிமாறிக் கொள்ளும் குறுந்தகவல்கள் பற்றி கவலை கொள்ளும் பட்சத்தில் இந்த அம்சத்தை செயல்படுத்தாமல் இருப்பது நல்லது.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile