கூகுளின் ஜிமெயில் சேவையில் ஸ்மார்ட் ரிப்ளைஸ் போன்ற வசதிகள் சோதனை செய்யப்படுவது சமீபத்தில் தெரியவந்த நிலையில், இவை வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகின்றன. ஜிமெயில் வெப் சேவையில் வழங்கப்படும் புதிய அம்சங்களில் புகைப்படங்களை இணைப்பது புதிய பட்டன் மூலம் எளிமையாக்கப்பட்டுள்ளது.
புதிய அப்டேட் மூலம் இனி முக்கியத்துவம் வாய்ந்த மின்னஞ்சல்களுக்கு குவிக் ரிமைன்டர்ஸ் மூலம் உடனடியாக பதில் அனுப்ப முடியும். ஆன்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் போன்றே ஜிமெயில் வெப் சேவையிலும் ஸ்மார்ட் ரிப்ளைஸ் (Smart Replies) வசதி வழங்கப்படுகிறது. இதை கொண்டு குறுந்தகவல்களை வேகமாக பதில் அனுப்ப முடியும்.
இதேபோன்று அவசியமற்ற நியூஸ்லெட்டர்களுக்கு எப்போது அன்-சப்ஸ்கிரைப் (UnSubscribe) செய்ய வேண்டும் என்பதை ஜிமெயில் பரிந்துரை செய்யும். இத்துடன் ஆபத்து நிறைந்த மின்னஞ்சல்கள் வரும் போது எச்சரிக்கை செய்யும். மேலும் ஜிமெயிலில் வழங்கப்பட்டு இருக்கும் கான்ஃபிடென்ஷியல் மோட் (Confidential Mode) ஈமைலை ஃபார்வேர்டு, காப்பி, டவுன்லோடு அல்லது பிரின்ட் செய்யவிடாமல் தடுக்கும்.
அதிக முக்கியத்துவம் வாய்ந்த மின்னஞ்சல்களை அனுப்பும் போது இந்த அம்சம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். குறிப்பிட்ட மின்னஞ்சலில் நேரம் குறித்தவுடன் தானாக மறைந்து போகும் வசதியும் ஜிமெயில் வெப் சேவையில் வழங்கப்படுகிறது. ஜிமெயில் வெப் சேவையில் புதிய அம்சங்கள் வழங்கப்பட்டு வருகிறது.
எனினும் சில வாடிக்கையாளர்களுக்கு சில புதிய அம்சங்கள் வரும் வாரங்களில் வழங்கப்படும். புதிய வசதிகளை பெற வாடிக்கையாளர்கள் ஜிமெயில் செட்டிங்ஸ் (Settings) — டிரை தி நியூ ஜிமெயில் (Try the new Gmail) அம்சங்களை தேர்வு செய்து பயன்படுத்த முடியும்.
புதிய அம்சங்கள் வேண்டாம் என்போர் மீண்டும் செட்டிங்ஸ் — கோ பேக் டு கிளாசிக் ஜிமெயில் (Go Back to Classic Gmail) ஆப்ஷன் சென்று பழைய ஜிமெயிலையே பயன்படுத்தலாம்.