AR நேவிகேஷன் உடன் Google Maps யின் டெஸ்டிங் ஆரம்பம்..!

AR  நேவிகேஷன் உடன் Google Maps யின் டெஸ்டிங்  ஆரம்பம்..!
HIGHLIGHTS

ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி தொழில்நுட்பத்தில் கூகுள் மேப்ஸ் ஆப் முதலில் ஜி.பி.எஸ். மூலம் வழிகளை சேகரித்துக் கொண்டு பின் கூகுளின் ஸ்ட்ரீட் வியூ விவரங்களை பயன்படுத்தி பயனர் செல்ல வேண்டிய இடத்திற்கு அழைத்து செல்லும்.

முக்கிய குறிப்பு 

I/O 2018 யில் கூகுள் AR உடன்  Google Maps அறிமுகம்.
ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி தொழில்நுட்பத்தை புகுத்த இருப்பதாக அறிவித்தது.
கூகுள் சார்பில் இதுவரை எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை

கூகுள் தனது I/O 2018 டெவலப்பர்கள் மாநாட்டில் கூகுள் மேப்ஸ் சேவையில் ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி தொழில்நுட்பத்தை புகுத்த இருப்பதாக அறிவித்தது.கூகுள் மேப்ஸ் ஆப்யில்  ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி  (AR) தொழில்நுட்பம் பயனரின் ஸ்மார்ட்போன் கேமரா மூலம் அவர்கள் இருக்கும் இடத்தில் இருந்து வழிதெரியாத இடத்திற்கு செல்ல சரியாக வழிகாட்டும். தற்சமயம் இந்த அம்சம் சோதனை செய்யப்படும் நிலையில், சில பயனர்களுக்கு மட்டும் இந்த வசதி வழங்கப்பட்டிருக்கிறது.

ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி தொழில்நுட்பத்தில் கூகுள் மேப்ஸ் ஆப் முதலில் ஜி.பி.எஸ். மூலம் வழிகளை சேகரித்துக் கொண்டு பின் கூகுளின் ஸ்ட்ரீட் வியூ விவரங்களை பயன்படுத்தி பயனர் செல்ல வேண்டிய இடத்திற்கு அழைத்து செல்லும்.

புதிய அம்சம் அனைவருக்கும் சேர்க்கப்பட்டதும், கூகுள் மேப்ஸ் செயலில் ஸ்டார்ட் ஏ.ஆர். (Start AR) எனும் பட்டன் இடம்பெறும் என தெரிகிறது. பயனர் செல்ல வேண்டிய இடத்தை சீராக காண்பிக்கும் வகையில் புதிய யூசர் இன்டர்ஃபேசை உருவாக்கும் வேளைகளில்;கூகுள் ஈடுபட்டுள்ளது.

கூகுள் மேப்ஸ் ஆப் ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி தொழில்நுட்பத்தை சார்ந்து இயங்கும் என்றபோதும், பயனர்கள் ஸ்மார்ட்போன் கேமராவிற்காக எப்போதும் கையை உயர்த்தி காட்ட வேண்டிய அவசியம் இல்லை. பயனர் இருக்கும் இடத்தை மேப்ஸ் சரியாக கண்டறிருந்து செல்லும் 

தற்சமயம் இந்த அம்சம் செலக்ட் செய்யப்பட்ட சில பயனர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டிருக்கிறது. புதிய அம்சம் அனைவருக்கும் வழங்குவது பற்றி கூகுள் சார்பில் இதுவரை எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo