கூகுள் I/O 2018 டெவலப்பர் நிகழ்வில் கூகுள் மேப்ஸ் சேவையில் பல்வேறு புதிய அம்சங்களை கூகுள் அறிமுகம் செய்துள்ளது. புதிய அம்சங்கள் கூகுள் மேப்ஸ் சேவையை இதுவரை இல்லாத வகையில் மிக சுலபமாக இயக்க வழி செய்கிறது.
கூகுள் மேப்ஸ் சேவையின் எக்ஸ்புளோர் டேப் மாற்றியமைக்கப்படுவதாகவும், இனி அருகாமையில் இருக்கும் புதிய மற்றும் வித்தியாசமானவற்றை அறிந்து கொள்ளவும் பயன்படுத்த முடியும். இனி மேப்ஸ் சேவையை பயன்படுத்தி குறிப்பிட்ட பகுதிகளை தேடும் போது அங்கு இருக்கும் பிரபல உணவகங்கள், நிகழ்ச்சிகள் உள்ளிட்ட தகவல்களையும் பார்க்க முடியும்.
இத்துடன் டிரென்டிங் லிஸ்ட்கள் மற்றும் நீங்கள் உணவு பிரியர் (Foodie) என்றால், டேஸ்ட்மேக்கர்கள் அதிகம் செல்லும் பகுதிகளை பட்டியலிட்டு காண்பிக்கும், மேலும் உள்ளூர் வாசிகள் வழங்கும் தகவல்கள், கூகுள் அல்காரிதம்கள் மற்றும் நம்பத்தகுந்த பதிப்பகங்கள் வழங்கும் தகவல்களை கொண்டு புதிய உணவகங்களை அறிந்து கொள்ள முடியும்.
கூகுள் மேப்ஸ் சேவையில் வழங்கப்பட்டு இருக்கும் மற்றொரு புதிய அம்சமாக யுவர் மேட்ச் (Your Match) இருக்கிறது. இந்த அம்சம் நீங்கள் புறப்படும் இடத்தில் எந்தளவு மகிழ்ச்சியாக இருக்க முடியும் என்றும் இதற்கான காரணங்களையும் குறிப்பிட்ட உணவு அல்லது பானங்களை டேப் செய்ததும் வழங்கும். மெஷின் லேர்னிங் எனும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கூகுள் இந்த தகவல்களை வழங்குகிறது.
இதற்கு அடிப்படையாக நீங்கள் தேர்வு செய்திருக்கும் விருப்பங்களையும், நீங்கள் செல்லும் பகுதிகள் மற்றும் பல்வேறு இதர தகவல்களை கொண்டு வழங்குகிறது. இந்த பட்டியல் நீங்கள் விரும்பும் மாற்றங்களுக்கு ஏற்ப தானாக மாறிக்கொள்ளும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நண்பர்கள் அல்லது குடும்பத்தாருடன் குழுவாக வெளியே செல்லும் போது முன்கூட்டிய திட்டமிட ஏதுவாக குறிப்பிட்ட இடங்களை அழுத்தி பிடித்து தேர்வு செய்ய வேண்டும், இதனை மற்றவர்கள் விரும்பும் பட்சத்தில் குறிப்பிட்ட இடங்களுக்கு வாக்களிக்கும் வசதி வழங்கப்படுகிறது. இதனால அதிகம் பேர் விரும்பும் பகுதிகளை அறிந்து கொண்டு விரைவில் செல்ல வேண்டிய இடத்தை முடிவு செய்ய முடியும்.
நீங்கள் புறப்பட வேண்டிய இடத்தை தேர்வு செய்ததும், அங்கு முன்பதிவு செய்ய வேண்டிய வேலையை கூகுள் உங்களுக்காக செய்து முடிக்கும். ஃபார் யு (For You) என்ற அம்சம் உங்களது பகுதியின் அருகாமையில் நடக்கு்ம புதிய தகவல்களை உடனுக்குடன் உங்களுக்கு வழங்கும், இதை கொண்டு அருகாமையில் உள்ள தலைசிறந்த இடங்களுக்கு சென்று வர முடியும்.
கூகுள் மேப்ஸ் சேவையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கும் புதிய அம்சங்கள் வரும் மாதங்களில் ஆன்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இயங்குதளத்தில் சேர்க்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.