இந்த பேருந்து எப்போ கிளம்பும் இனி யாரிடமும் கேக்க வேண்டாம் கூகுள் மேப்பில் நேரடியாக பார்க்கலாம்.
கூகுள் மேப் புதிய அப்டேட், பேருந்து விவரங்களையும் இனி நீங்க தெரிஞ்சிக்கலாம்.
பேருந்து நேரலை போக்குவரத்து மற்றும் நீங்கள் அது எப்பொழுது எத்தனை மணி அளவில் கிளம்பும்
கூகுள் நிறுவனம் பல புதிய அப்டேட் கொண்டு வந்தது கொண்டே இருக்கிறது, அந்த வகையில் கூகுள் மேப்பில் மக்கள் பயனடையும் வகையில் பல புதிய தகவலை கொண்டு வந்தது. சமீபத்தில் கூகுள் மேப்பில் AR நேவிகேஷன், ஸ்பீட் லிமிட்கள், ஸ்பீட் டிராப் மற்றும் நீங்கள் செல்லும் வழியியில் எவ்வளவு ட்ராபிக் இருக்கிறது என்பதையும் நீங்கள் இங்கு எளிதாக அறியலாம்.இது போன்ற வசதிகளை கூகுள் தனது மேப்ஸ் சேவையில் சேர்த்தது.
அந்த வகையில் தற்பொழுது பேருந்து நேரலை போக்குவரத்து மற்றும் நீங்கள் அது எப்பொழுது எத்தனை மணி அளவில் கிளம்பும் என்பதை பற்றிய தகவலையும் நிங்கள் இங்கு தெரிந்து கொள்ளலாம் மேலும் இதில் இந்திய ரயில்வேயின் ரெயில் நேரங்கள் மற்றும் பல்வேறு போக்குவரத்து விவரங்களை வழங்கும் வசதிகளை மேப்ஸ் சேவையில் கூகுள் வழங்கி இருக்கிறது.
போக்குவரத்து சார்ந்த பேருந்து விவரங்கள் நீங்கள் இங்கு லைவாக தெரிந்து கொள்ளலாம்.
இந்த அம்சம் ஒரு இடத்தில் இருந்து பயனர் செல்ல வேண்டிய இடத்திற்கு செல்ல எத்தனை மணி நேரம் ஆகும் என்பதை துல்லியமாக காண்பிக்கிறது. அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் இயக்கப்படும் பேருந்து சார்ந்த விவரங்களை நேரடி போக்குவரத்து சார்ந்து வழங்குகிறது. இதை கொண்டு பயனர்கள் தங்களது பயணத்தை முன்கூட்டியே சிறப்பாக திட்டமிட முடியும்.
புதிய அம்சத்தை இயக்க பயனர்கள் தங்களது கூகுள் மேப்ஸ் செயலியில் பயணிக்க வேண்டிய இடத்தை குறிப்பிட்டு பின் டிரான்சிட் பட்டனை க்ளிக் செய்ய வேண்டும். இவ்வாறு செய்ததும் பேருந்து மற்றும் நேரலை போக்குவரத்து நெரிசல் விவரங்களை மேப்ஸ் செயலி வழங்கும்.
முதற்கட்டமாக இந்த வசதி சென்னை, கோயம்புத்தூர், பெங்களூரு, மைசூர், ஐதராபாத், மும்பை, பூனே, லக்னோ, டெல்லி மற்றும் சூரத் போன்ற நகரங்களில் வழங்கப்படுகிறது.
ரெயில் விவரங்கள் எத்தனை மணிக்கு வரும் லைவாக பார்க்கலாம்.
இந்திய ரெயில்வேயின் ரெயில் விவரங்களை வழங்க ஏற்கனவே பல்வேறு செயலிகள் கிடைக்கின்றன. அந்த வகையில் கூகுள் நிறுவனம் வேர் இஸ் மை டிரெயின் எனும் செயலியுடன் இணைந்து கூகுள் மேப்ஸ் செயலியில் ரெயில் நேரங்களை நேரலையில் துல்லியமாக வழங்குகிறது.
இந்த அம்சத்தை பயன்படுத்த பயனர்கள் பயணிக்க வேண்டிய இடத்தை குறிப்பிட்டு தேட வேண்டும். பின் ரெயில் விவரங்கள் பட்டியலிடப்படும். இதில் தாமதமாகி இருக்கும் ரெயில் விவரங்களையும் கூகுள் மேப்ஸ் வழங்குகிறது.
மற்ற போக்குவரத்து பரிந்துரைகள்
கூகுள் மேப் மக்களுக்கு தொடர்ந்து பல அம்சத்தை கொண்டு வந்து கொண்டே இருக்கிறது, நீங்கள் தெரியாத இடத்திற்கு பயணிக்கிறீர்களா கவலையே வேண்டாம் உங்களிடம் கூகுள் மேப் இருந்தால் போதும் அது நீங்கள் போக இருக்கும் இடத்தில் சரியாக கொண்டு போய் சேர்த்து விடுகிறது. மேலும் இதில் இதில் பொது போக்குவரத்து மற்றும் ஆட்டோ ரிக்ஷா போன்றவற்றை பரிந்துரைக்கும். புதிய அம்சம் பயனர்கள் பயணிக்க பல்வேறு வழிகளில் விரும்பியவற்றை தேர்வு செய்யும் வசதியை வழங்குகிறது. இந்த அம்சம் முதற்கட்டமாக பெங்களூரு மற்றும் டெல்லி உள்ளிட்ட நகரங்களில் வழங்கப்பட்டுள்ளது. விரைவில் மற்ற பகுதிகளுக்கும் வழங்கப்படும் என தெரிகிறது.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile