கூகுள் மேப்பில் புதிய அப்டேட் அசத்தும், அம்சத்தால் மக்கள் மகிழ்ச்சி

Updated on 26-May-2018
HIGHLIGHTS

கூகுள் மேப்ஸ் செயலியில் இதுவரை வழிகாட்டி வந்த நீல நிற நேவிகேஷன் அம்பு நீக்கப்பட்டு அனிமேஷன் வாகனங்கள் 3D கார்கள் சேர்க்கப்பட்டுள்ளது .

கூகுள் மேப்ஸ் செயலியில் சத்தமில்லாமல் புதிய வசதி சேர்க்கப்பட்டுள்ளது. வழக்கமாக கூகுள் மேப்ஸ் சேவைகளில் நமக்கு வழி காட்டி வந்த நீல நிற நேவிகேஷன் அம்பு நீக்கப்பட்டு விட்டது.

கவலை வேண்டாம், அம்பு குறிக்கு மாற்றாக அழகிய கார் பொம்மைகளை வழங்கியுள்ளது. புதிய பொம்மை கார் நீங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு உங்களை அழைத்து செல்லும். உங்களது விருப்பத்திற்கு ஏற்ப அதிவேக எஸ்யுவி அல்லது பிக்கப் டிரக் என எதை வேண்டுமானாலும் தேர்வு செய்து கொள்ளலாம்.

புதிய அம்சம் வெளியாக எவ்வித காரணமும் அறிவிக்கப்படாத நிலையில், இதன் மூலம் நேவிகேஷன் அனுபவம் முன்பை விட வித்தியாசமானதாக இருக்கும். ஸ்வாப் செய்ய பயணத்தின் போது டிரைவிங் நேவிகேஷன் மோடில் உள்ள அம்பு குறியை தட்டி, உங்களுக்கு விருப்பமான வாகனத்தை தேர்வு செய்ய செய்யலாம். 

இந்த அம்சம் முதற்கட்டமாக கூகுள் மேப்ஸ் சேவையின் ஐஓஎஸ் பதிப்பில் மட்டும் சேர்க்கப்பட்டுள்ளது. ஆன்ட்ராய்டு இயங்குதளத்தில் இதற்கான அப்டேட் வழங்குவது குறித்து இதுவரை எவ்வித தகவலும் இல்லை. எனினும் இந்த அப்டேட் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்தில் கூகுள் நிறுவனத்தின் ஜிமெயில், அசிஸ்டண்ட் உள்ளிட்ட சில அம்சங்களில் புதிய வசதிகள் அறிமுகம் செய்யப்பட்டன. அந்த வகையில் புதிய அம்சங்கள் அவ்வப்போது சிறிய அப்டேட்கள் மூலம் வழங்கப்படுகின்றன.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :