வேகமாக போக வேண்டுமா கூகுள் மேப்பின் மூலம் எவ்வளவு ட்ராபிக் இருக்கிறது தெரிஞ்சிக்கோங்க..

வேகமாக  போக வேண்டுமா  கூகுள்  மேப்பின்  மூலம் எவ்வளவு  ட்ராபிக்  இருக்கிறது தெரிஞ்சிக்கோங்க..
HIGHLIGHTS

கூகுள் மேப்ஸ் ஆண்ட்ராய்டு செயலியில் போக்குவரத்து நெரிசல் பற்றிய விவரங்களை அறிந்து கொள்ள புதிய வசதி சேர்க்கப்படுகிறது.

நீங்கள்  அவசரமாக ஒரு இடத்திற்க்கு  செல்ல வேண்டும் என்றால், எந்த இடத்தில்  சென்றால் விரைவாக செல்ல முடியும் என்பதை பற்றி  நீங்கள்  கூகுளின்  இந்த ஆப் மூலம்  தெரிந்து கொள்ளலாம்.

கூகுள் மேப்ஸ் ஆண்ட்ராய்டு செயலியில் போக்குவரத்து நெரிசல் பற்றிய விவரங்களை அறிந்து கொள்ள புதிய வசதி சேர்க்கப்படுகிறது. முன்னதாக கூகுள் மேப்ஸ் செயலியில் பயனர்கள் விபத்து மற்றும் போக்குவரத்து இடையூறுகளை தெரிவிக்கும் வசதி வழங்கப்பட்டிருந்தது. தற்சமயம் மேலும்  இந்த அம்சத்தை தொடர்ந்து புதிய வசதி சேர்க்கப்படுகிறது.

பயனர்கள் இனி கூகுள் மேப்ஸ் ஆண்ட்ராய்டு பதிப்பின் விபத்து தெரிவிக்கும் ஆப்ஷனில் ஸ்லோடவுன் (Slowdown) வசதி மூலம் நெரிசல் இருக்கும் பகுதிகளை தெரிவிக்கலாம். முதற்கட்டமாக ஆண்ட்ராய்டு தளத்தில் இந்த வசதி சேர்க்கப்பட்டிருக்கும் நிலையில், ஐ.ஓ.எஸ். பதிப்பில் வழங்கப்பட்டிருக்கிறதா என்பது குறித்து இதுவரை எவ்வித தகவலும் இல்லை.

கடந்த மாதம் கூகுள் மேப்ஸ் செயலியில் பயனர்கள் விபத்துக்கள் மற்றும் வேக கட்டுப்பாடு பகுதிகளை தெரிவிக்கும் வசதி சேர்க்கப்பட்டது. இதற்கென கூகுள் மேப்ஸ் செயலியில் ஆட் எ ரிபோர்ட் (Add a report) வசதி சேர்க்கப்பட்டது. இதனை க்ளிக் செய்ததும் விபத்து அல்லது வேக கட்டுப்பாட்டு பகுதி பற்றிய விவரங்களை கூகுளுக்கு நேரடியாக தெரிவிக்கலாம். 

இதேபோன்று மற்றவர்கள் பதிவிட்டிருக்கும் கருத்துக்களையும் கூகுள் மேப்ஸ் காண்பிக்கிறது. இதனால் அதே வழியில் வருவோர் கூகுள் மேப்ஸ் பயன்படுத்தும் போது பயணத்தை அதே வழியில் தொடரலாமா அல்லது வேறு பாதையில் செல்ல வேண்டுமா என்பதை முடிவு செய்து கொள்ளலாம்.

இந்த அம்சத்தை பயன்படுத்த ஒருவர் நேவிகேஷன் மோட் சென்று ஏரோ அப் பட்டனை க்ளிக் செய்ய வேண்டும். இனி திரையில் திறக்கும் மெனுவில் ஆட் எ ரிப்போர்ட் ஆப்ஷனிலேயே ஸ்லோடவுன் பட்டன் இடம்பெற்றிருக்கும். எனினும், இந்த வசதி சாதனத்தின் செட்டிங்கிற்கு ஏற்ப மொழி அடிப்படையில் வித்தியாசமாக தோன்றலாம்.

புதிதாக சேர்க்கப்பட்டிருக்கும் ஸ்லோடவுன் ஆப்ஷன்களின் மூலம் ஒருவர் குறிப்பிட்ட பகுதியில் குறைவான போக்குவரத்து நெரிசல் இருக்கிறதா அல்லது கூட்ட நெரிசல் மட்டும் இருக்கிறதா என்பதை அறிந்து கொள்ளலாம். கூகுள் மேப்ஸ் ஆண்ட்ராய்டு (வெர்ஷன் 10.12.1) பதிப்பில் இந்த அம்சம் சேர்க்கப்பட்டிருக்கிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo