கூகிள் மேப்பின் புதிய அப்டேட் எப்படி வேலை செய்யும் உங்களுக்கு தெரியுமா…!

Updated on 16-Oct-2018
HIGHLIGHTS

கூகுள் மேப்பில் அன்றாட ட்ராபிக் கண்ட்ரோல் ட்ராபிக்கை கட்டுப்படுத்தும் புதிய அம்சங்கள் வழங்கப்படுகிறது.

கூகுள் மேப்பில் அன்றாட ட்ராபிக் கண்ட்ரோல் ட்ராபிக்கை கட்டுப்படுத்தும்  புதிய அம்சங்கள் வழங்கப்படுகிறது. புதிய கம்யூட் (commute) எனும் டேப் போக்குவரத்து எவ்வளவு ட்ராபிக் இருக்கிறது என்பதை விவரங்களை அது லைவாக வழங்கும்.

இந்த புதிய அம்சத்தை கொண்டு ஒரு கிளிக் செய்து நீங்கள் பயணிக்கும் வழித்தடத்தில் எவ்வளவு  ட்ராபிக் இருக்கிறது நிலவரத்தை லைவாக தெரிந்து கொள்ளலாம். மேலும் உங்களது பயணம் வழக்கமானதாக இருக்குமா அல்லது கூடுதல் நேரம் எடுத்து கொள்ளுமா என்ற விவரங்களையும் இந்த அம்சம் வழங்குகிறது.

கம்யூட் டேப் மூலம் ட்ராபிக்  இல்லாத வேறு வழிகளையும் தெரிந்து கொள்ள முடியும். ஆன்ட்ராய்டு தளத்தில் தாமதம் மற்றும் இடையூறு சார்ந்த விவரங்களை நோட்டிபிகேஷன் வடிவில் பெற முடியும். மேலும் வாகனம் ஓட்டுவது அல்லது பொது போக்குவரத்து உள்ளிட்டவற்றில் பயணர்கள் செல்ல வேண்டிய இடம் மற்றும் நேரத்திற்கு சரியாக சென்றடைவதற்கான விவரங்களை வழங்குகிறது.

இத்துடன் வழித்தடத்தில் இருக்கும்  ட்ராபிக்  அல்லது அடுத்த ரெயில் கிளம்பும் நேரம் போன்றவற்றை அறிந்து கொள்ளலாம்.

உலகம் முழுக்க 80 பகுதிகளில் உள்ள டிரான்சிட் ரைடர்கள், தங்களது பேருந்து மற்றும் ரெயில் எங்கு இருக்கிறது என்பதை லையில் பார்க்க முடியும். சிட்னி நகரில் இந்த வசதியை வழங்க கூகுள் நிறுவனம் நியூ சவுத் வேல்ஸ் உடன் இணைந்துள்ளது. இதை கொண்டு அடுத்து வரும் பேருந்து அல்லது ரெயிலினுள் ட்ராபிக் எந்தளவு இருக்கிறது என்பதையும் அறிந்து கொள்ள முடியும்.

இந்த அம்சம் விரைவில் உலகம் முழுக்க அதிகப்படியான நகரங்களில் வழங்கப்பட இருக்கிறது. மேலும் ஸ்பாடிஃபை, ஆப்பிள் மியூசிக் மற்றும் கூகுள் பிளே மியூசிக் போன்ற சேவைகள் கூகுள் மேப்ஸ் தளத்தினுள் இயக்க முடியும். இதனால் கூகுள் மேப்ஸ் நேவிகேஷன் செய்யும் போதே பாட்காஸ்ட்களை கேட்க முடியும். வரும் வாரங்களில் புதிய அம்சங்கள் ஆன்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். தளத்தில் வழங்கப்பட இருக்கிறது.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :