கூகுள் நிறுவனம் தொடர்ந்து மக்களுக்கு பல புதிய அப்டேட்களை கொண்டு வந்து கொண்டே இருக்கிறது, சமீபத்தில் அந்த நிறுவனம் கூகுள் மேப்பில் போக்குவரத்து நெரிசலை எளிதில் கண்டுபிடிக்க ஒரு புதிய அப்டேட் கொண்டு வந்தது, கூகுள் நிறுவனம் மக்களின் பயன்பாட்டிற்கு பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த செயலிகளையும், அப்டேட்களையும் வழங்கி கொண்டே வருகிறது
Google Maps Navigation Speedometer
வேஸ் (Waze) நிறுவனத்திடம் இருந்து சில சிறப்பம்சங்களை பெற்று ஸ்பீட் கேமரா, ஸ்பீட் ட்ராப்கள் போன்ற வசதிகளை கூகுள் மேப்பில் சேர்ந்து இருந்தது கூகுள். தற்போது புதிதாக ஸ்பீடோ மீட்டரைய்யும் கூகுள் மேப்பில் இணைத்துள்ளது.
நேவிகேசனில் இணைக்கப்பட்டுள்ள ஸ்பீடோ மீட்டர் உங்கள் வண்டியின் வேகத்தை கட்டுக்குள் வைக்க உதவும். குறிப்பிட்ட வேகத்தை தாண்டி நீங்கள் வாகனங்களை ஓட்ட ஆரம்பித்தால் உங்களை எச்சரிக்க ஆரம்பித்துவிடும்.
தற்போது அமெரிக்கா, பெல்ஜியம், இங்கிலாந்து, ப்ரேசில் போன்று நாடுகளில் மட்டுமே பயன்பாட்டிற்கு வந்துள்ளது. மிக விரைவில் இந்த அப்டேட் உலகம் முழுவதும் பயன்பாட்டிற்கு வர உள்ளது. நீங்கள் உங்களின் கூகுள் மேப்பில் இருக்கும் நேவிகேசனை செக் செய்து உங்கள் பகுதியில் புதிய அப்டேட் வந்துள்ளதா என்பதை நீங்கள் அறிந்து கொள்ளலாம்.