கூகுள் IO 2018 நிகழ்வில் கூகுள் டூப்லெக்ஸ் எனும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த தகவல் பரிமாற்றம் செய்யும் மென்பொருள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. இந்த மென்பொருள் பயன்படுத்துவோரின் சார்பாக மற்றவர்களுக்கு அழைப்பை மேற்கொண்டு முன்பதிவு செய்யும்.
சொப்ட்வர் பொது டெஸ்டிங் முறை இந்த ஆண்டு கோடை காலத்தில் துவங்கும் என தெரிவிக்கப்பட்டு இருந்த நிலையில், தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் கூகுள் டூப்லெக்ஸ் சொப்ட்வர் கால் சென்டர்களிலும் பயன்படுத்தப்படலாம் என கூறப்படுகிறது.
பெயருக்கு ஏற்றார்போல் டிஜிட்டல் அசிஸ்டன்ட் உதவியோடு டூப்லெக்ஸ் தகவல் பரிமாற்றம் செய்கிறது. மே மாதம் நடைபெற்ற டெவலப்பர்கள் மாநாட்டில் கூகுள் டூப்லெக்ஸ் எவ்வாறு முன்பதிவுகளை செய்யும் என்பது விளக்கப்பட்டது. இதில் மென்பொருள் அதன் பயனருக்கு பதி்ல் அழைப்பை மேற்கொண்டு முன்பதிவு செய்து அனைவரையும் வியப்படைய செய்தது. அறிமுகத்தின் போது சர்ச்சைக்குரியதாக தெரிந்தாலும், பயனர்களை கவர தவறவில்லை என்றே கூற முடியும்.
தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் சில பெரிய நிறுவனங்கள் தங்களது அலுவலகங்கள் (கால் சென்டர்) கூகுள் டூப்லெக்ஸ் சொப்ட்வர் சோதனை செய்ய துவங்கி இருப்பதாக கூறப்படுகிறது. டூப்லெக்ஸ் மென்பொருள் மூலம் கால் சென்டர்களில் மனிதர்கள் செய்யும் வேலையை முழுமையாக எடுத்துச் செய்ய முடியும்.
கூகுள் IO 2018 நிகழ்வில் டூப்லெக்ஸ் அறிமுகம் செய்யப்பட்ட போது பயனரின் நேரத்தை மிச்சப்படுத்தும் என எளிமையாக அறிவிக்கப்பட்ட நிலையில், இந்த மென்பொருள் பெரும் நிறுவனங்களில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்றே தெரிகிறது. கால் சென்டர்களில் பயன்படுத்தப்படுவது குறித்த தகவல் வெளியானதும், கூகுள் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில் டூப்லெக்ஸ் மென்பொருள் மூலம் பயனர் சார்ந்த செயலிகளில் மட்டுமே கவனம் செலுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது