போன் நம்பர் இல்லமால் கால் செய்யும் புதிய வசதி வழங்கியது கூகுள்.
கூகுள் டுயோ ஆண்ட்ராய்டு தளத்தில் மின்னஞ்சல் முகவரி கொண்டு வீடியோ அழைப்புகளை மேற்கொள்ள செய்யும்
ஆண்ட்ராய்டு இயங்குதளத்திற்கான கூகுள் டுயோ செயலியில் வாடிக்கையாளர்கள் தங்களின் மின்னஞ்சல் முகவரி கொண்டு அழைப்புகளை மேற்கொள்வதற்கான வசதி வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
புதிய சேவை வழங்கப்படும் போது, கூகுள் டுயோ செயலியில் மொபைல் போன் நம்பர் இன்றி அழைப்புகளை மேற்கொள்ள முடியும். இதே சேவை கூகுள் டுயோ வலைதள பதிப்பில் ஏற்கனவே வழங்கப்பட்டு விட்டது. சமீப காலங்களில் இந்த சேவையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன.
புதிய வசதியை வழங்கும் சேவை கூகுள் டுயோ செயலியில் 'ரீச்சபிள் வித் இமெயில் அட்ரெஸ்' (Reachable with email address) எனும் பெயரில் உருவாகி வருவதாக கூறப்படுகிறது.
கூகுள் டுயோ செயலியில் இந்த அம்சம் செட்டிங்ஸ் — அக்கவுண்ட் பகுதியின் கீழ் பட்டியலிடப்பட்டு இருக்கிறது. இந்த அம்சம் மற்ற பயனர்கள் மின்னஞ்சல் முகவரி மூலம் தொடர்பு கொள்ள வழி செய்கிறது. தற்சமயம் இந்த அம்சம் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.
கூகுள் டுயோ ஆண்ட்ராய்டு தளத்தில் மின்னஞ்சல் முகவரி கொண்டு வீடியோ அழைப்புகளை மேற்கொள்ள செய்யும் வசதி எப்போது வழங்கப்படும் என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது.
முன்னதாக கூகுள் டுயோ வலைதள பதிப்பில் இந்த சேவை ஜனவரி மாதத்தில் வழங்கப்பட்டது. புதிய சேவையில் மின்னஞ்சல் முகவரி கொண்டே வீடியோ அழைப்புகளை மேற்கொள்ள முடியும். எனினும், மொபைல் நம்பர் லிண்க் செய்யப்படாத அக்கவுண்ட்கள் காண்டாக்ட் பட்டியலில் காண்பிக்கப்படாமல் இருந்தது
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile