கூகுள் குரோம் ஆண்ட்ராய்டில் டார்க் மோட் வசதி அறிமுகம்

Updated on 04-Mar-2019
HIGHLIGHTS

இந்த வசதி மொபைல் மட்டுமின்றி வலைதளத்திற்கும் கிடைக்கிறது. டார்க் மோட் வசதியினை ஆண்ட்ராய்டு கியூ இயங்குதளத்திலும் எதிர்பார்க்கலாம்.

கூகுள் நிறுவனம் தனது ஆண்ட்ராய்டு மற்றும் வெப்சைட்களிலில் டார்க் மோட் வசதியை வழங்குவதற்கான வேலைகளை ஈடுபட்டு இருப்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் டார்க் மோட் வசதியை செயல்படுத்த பயனர்கள் க்ரோம் கனாரியை பயன்படுத்தலாம். சில வலைப்பக்கங்களில் டார்க் மோட் வித்தியாசமாக காட்சியளிக்கிறது . இந்த வசதி மொபைல் மட்டுமின்றி வலைதளத்திற்கும் கிடைக்கிறது. டார்க் மோட் வசதியினை ஆண்ட்ராய்டு கியூ இயங்குதளத்திலும் எதிர்பார்க்கலாம்.

சாம்சங் பிரவுசர் பயன்படுத்தியதை போன்றே வழிமுறையை க்ரோம் சேவையின் டார்க் மோட் வசதியை செயல்படுத்த கூகுள் பின்பற்றலாம் என கூறப்படுகிறது. இந்த ஆண்டு துவக்கம் முதல் டார்க் மோட் வசதியை வழங்குவதில் கூகுள் ஆர்வம் செலுத்தி வருகிறது. 

இருப்பினும் , டார்க் மோட் அனைத்து வலைதளங்களுக்கும் சீராக இருக்குமா என்பது குறித்து எவ்வித தகவலும் இல்லை. இவை பயன்பாட்டு காரணங்களுக்காக வழங்கப்பட்டிருப்பதால், இதனால் செயல்பாடுகளில் எவ்வித பாதிப்பும் ஏற்படாது. புதிய டார்க் மோட் க்ரோம் கனாரி புதிய வெர்ஷனில் பயன்படுத்த முடியும்.

டார்க் மோட் வசதியின் மூலம் இரவு நேர பயன்பாடுகளை சிறப்பானதாக மாற்ற முடியும். முன்னதாக இந்த அம்சம் ஆண்ட்ராய்டு கியூ இயங்குதளத்தில் சீராக வழங்கப்படலாம் என கூறப்பட்டது. எனினும், இந்த வசதி ஆண்ட்ராய்டு மற்றும் வலைதளங்களில் அறிமுகமாகி இருக்கிறது

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :