பியூட்டி ஆப்களை கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து அதிரடியாக நீக்கியுள்ளது.
ஆப்யில் அப்லோடு ஆன போட்டோக்கள் தவறாக பயன்படுத்தப்படும். எனினும், கூகுள் சார்பில் இந்த ஆப்களை முடக்கும் நடவடிக்கை துவங்கப்பட்டு விட்டது.
கூகுள் பிளே ஸ்டோரில் இருக்கும் பல்வேறு பியூட்டி கேமரா ஆப்கள் தீங்கு விளைவிக்கும் தன்மை கொண்ட விளம்பர சர்வர்களுடன் தொடர்பு கொண்டிருப்பதாக பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்திருக்கின்றனர். இவற்றில் சில ஆப்கன் அதிகளவு பிரபலமானதால் பல லட்சம் பேர் டவுன்லோடு செய்திருக்கின்றனர். இவ்வாறு டவுன்லோடு செய்தவர்களில் பலர் ஆசியாவில் வசிக்கின்றனர்.
இதுதவிர இந்த ஆப்கள் பயனர்களின் ஸ்மார்ட்போன்களில் முழு ஸ்கிரீனை மறைக்கும் வகையில் விளம்பரங்களை வெளியிடும். இவற்றில் பல்வேறு விளம்பரங்கள் பயனரின் பிரவுசர் வழியே திறக்கும்படி உருவாக்கப்பட்டிருக்கும். இந்த விளம்பரங்கள் பயனருக்கு தீங்கு ஏற்படுத்தும் நோக்கில் இருக்கும். இடையூறை ஏற்படுத்தும் செயலி மறைந்திருப்பதால், வாடிக்கையாளர்களால் எங்கிருந்து விளம்பரங்கள் வருகின்றன என்பதையே கண்டறிய முடியாது.
இதுபோன்று பிரச்சனைகளை ஏற்படுத்தும் செயலிகளை கண்டறிவது வாடிக்கையாளர்களுக்கு கடினமான விஷயம் ஆகும். இந்த ஆப்கள் இன்ஸ்டால் ஆனதும் இவை பயனர் ஸ்மார்ட்போனில் ஷார்ட்கட் ஒன்றை உருவாக்கி அதனை மறைத்து வைத்துவிடும். செயலி மறைக்கப்பட்டிருப்பதால் இவற்றை பயனரால் கண்டறியவே முடியாது. மேலும் இவை பேக்கர்களை பயன்படுத்தி எவ்வித பாதுகாப்பு வலையிலும் சிக்காத வகையில் உருவாக்கப்படுகின்றன.
பெரும்பாலும் இதுபோன்ற ஆப்கள் தீங்கிழைக்கும் வலைதளங்களை திறக்கச் செய்து அவற்றின் மூலம் பயனரின் தனிப்பட்ட விவரங்கள், முகவரி அல்லது மொபைல் போன் விவரங்களை சேகரிக்கும். இந்த செயலிகள் ரிமோட் சர்வெர்கள் அல்லது வெளிப்புற இணைய முகவரிகளில் இருந்து டவுன்லோடு ஆகி விளம்பரங்களை இயக்க ஆரம்பிக்கும்.
முதற்கட்ட ஆய்வில் போட்டோ ஃபில்ட்டர் சேவைகளை வழங்கும் ஆப்கள் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து கண்டறியப்பட்டன. இந்த ஆப்கள் பிரத்யேக சர்வெர் மூலம் பயனர் போட்டோக்களை அழகுப்படுத்துகின்றன. எனினும், அழகுபடுத்தப்பட்ட போட்டோ உடன் போலி விவரங்களும் சேர்ந்து வரும்.
ஆப்யில் அப்லோடு ஆன போட்டோக்கள் தவறாக பயன்படுத்தப்படும். எனினும், கூகுள் சார்பில் இந்த ஆப்களை முடக்கும் நடவடிக்கை துவங்கப்பட்டு விட்டது.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile