நீங்கள் நிறைய முறை முக்கியமான ஈமெயில் அனுப்ப நினைத்து இருப்பீர்கள் ஆனால், நாம் பிசி செடுலால் இத்தகைய ஈமெயில் அனுப்ப மறந்து போகிறோம் . அந்த அதுவே அனுப்ப வேண்டிய டைம் ஷெடுல் செய்து விட்டால் சரியான நேரத்தில் அது சென்று விடும் இத்தகைய அமசமானது பேஸ்புக்கில் இருக்கிறது நீங்கள் போட வேண்டிய போஸ்டின் டைம் பிக்ஸ் செய்தால் அந்த நேரத்தில் அது சரியாக சென்றுவிடும்
இதனை தொடர்ந்து ஜிமெயிலில் ஈமெயில்களை ஷெட்யூல் செய்யும் வசதியை வழங்க இருக்கிறது. இதுவரை பயனர்கள் ஈமெயில் ஷெட்யூல் செய்ய மூன்றாம் தரப்பு ஆப்கலை அதாவது (Hootsuit )பயன்படுத்தி வரும் நிலையில் புதிய அம்சம் பலருக்கு பயன்தரும் வகையில் இருக்கும்.
மொபைலில் ஈமெயில்களை ஷெட்யூல் செய்யும் வசதி வழங்கப்பட இருப்பதால், இதே அம்சம் வெப்சைட்டிற்கும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜிமெயில் மொபைல் ஆப்களின் கம்போஸ் ஆப்ஷனின் அருகில் உள்ள ஷெட்யூல் சென்ட் எனும் அம்சம் புதிதாக சேர்க்கப்படுகிறது.
ஷெட்யூல் செய்யும் அம்சம் மொபைல் மற்றும் வெப்சைட் அப்டேட்களுக்கு ஒரே சமயத்தில் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இதற்கு எவ்வித ஆதாரமும் இதுவரை வெளியாகவில்லை. ஷெட்யூல் ஈ-மெயில் அம்சம் ஈமெயில்களை டைப் செய்து, அதன் பின் நீங்கள் விரும்பும் நேரத்தில் அவை தானாக செல்லும் படி இருக்கும். அதாவது பேஸ்புக்கில் நீங்கள் எப்படி போஸ்ட் செய்கிறீர்களோ அதே போல் தான்.
ஜிமெயிலின் புதிய செயலியை APK . வடிவில் டவுன்லோடு செய்து பயன்படுத்தலாம். அவசரம் இல்லை என்பவர்கள் பிளே ஸ்டோரில் அப்டேட் கிடைக்கும் வரை காத்திருக்கலாம்.