ஜிமெயிலில் ஆண்ட்ராய்ட் சாதனைகளுக்கு புதிய அம்சம் அறிமுகம்..!

Updated on 08-Mar-2019
HIGHLIGHTS

ஜிமெயில் செயலியை வைத்திருப்போர் ஸ்மார்ட் கம்போஸ் பட்டனை ஜிமெயில் அக்கவுண்டில் செயல்படுத்தலாம்.

கூகுள் நிறுவனம் தனது ஜிமெயில் செயலியில் பல மாற்றங்களை கொண்டு வரும் வேளைகளில் ஈடுபட்டு வருகிறது பயனர்கள் எளிதாக எந்த இடையூறு இன்றி  எளிதாக பயன்படுத்த கொடு வருகிறது இதனுடன் இதில் இன்பாக்ஸ் அம்சத்தில் சில புதிய வசதிகள் இடம்பெற்றிருக்கிறது.

புதிய தோற்றம் மட்டுமின்றி ஜிமெயிலில் ஸ்மார்ட் ரிப்ளை வசதியும் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் ஈமெயில்களுக்கு வேகமாக பதில் அளிக்க மூன்று ஆப்ஷன்கள் வழங்கப்படுகிறது. 2018 டெவலப்பர் நிகழ்வில் கூகுள் ஸ்மார்ட் கம்போஸ் வசதியை அறிமுகம் செய்தது.

ஜிமெயிலின் ஸ்மார்ட் கம்போஸ் அம்சம் செயற்கை நுண்ணறிவு மற்றும் மெஷின் லெர்னிங் தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறது. இதன் மூலம் மிகவேகமாக ஈமெயில்களை எழுத முடியும். மெஷின் லெர்னிங் தொழில்நுட்பம் ஈமெயில்களை டைப் செய்யும் போது பொருத்தமான வார்த்தைகளை பரிந்துரைக்கும். 

ஜிமெயில் வெப் தளத்தில் வழங்கப்பட்டதும், ஸ்மார்ட் கம்போஸ் அம்சம் ஆண்ட்ராய்டு இயங்குதளங்களில் அதிகம் எதிர்பார்க்கப்பட்டது. இதுவரை கூகுளின் புதிய ஸ்மார்ட்போன்களான பிக்சல் 3 மற்றும் பிக்சல் 3 XL ஸ்மார்ட்போன்களுக்கு மட்டும் ஸ்மார்ட் கம்போஸ் வசதி பிரத்யேக அம்சமாக வழங்கப்பட்டிருந்தது.

தற்சமயம் இந்த அம்சம் அனைத்து ஆண்ட்ராய்டு சாதனங்களுக்கும் வழங்கப்படுகிறது. ஜிமெயில் ஆண்ட்ராய்டு செயலியில் இந்த அம்சம் தானாக வழங்கப்படவில்லை. இதனை பயனர்கள் செயல்படுத்த வேண்டும். அப்டேட் செய்யப்பட்ட ஜிமெயில் செயலியை வைத்திருப்போர் ஸ்மார்ட் கம்போஸ் பட்டனை ஜிமெயில் அக்கவுண்டில் செயல்படுத்தலாம்.

இதை செய்ய ஜிமெயில் ஆப் சென்று மெனுவில் செட்டிங்ஸ் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும். இனி அக்கவுண்ட்களில் ஒன்றை  க்ளிக் செய்து ஸ்மார்ட் கம்போஸ் வசதியை செயல்படுத்தவும். இதைத் தொடர்ந்து மின்னஞ்சல்களை டைப் செய்யும் போது ஸ்மார்ட் பரிந்துரைகளை பார்க்க முடியும்.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :